SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரளயகாளேஸ்வரர் கோயிலில் பச்சை குத்திய சிவனடியார்கள்

2018-04-26@ 14:42:20

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில் பிரசித்தி பெற்ற பிரளயகாளேஸ்வரர் கோயில் உள்ளது. பெண்ணாடம், திருமலைஅகரம், பொன்னேரி, கொத்தட்டை, இறையூர், செம்பேரி, துறையூர், முருகன்குடி, சவுந்திரசோழபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆன்மிக பக்தர்கள் இக்கோயிலில் வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் சித்திரை திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் நாளான நேற்று முன்தினம் அப்பர் சுவாமி திருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காலையில் அப்பருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பழங்கள் உள்ளிட்ட 14 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை, மாலையில் வீதியுலா நடைபெற்றது. அப்பர் திருவிழாவை முன்னிட்டு இடபவாகனம், சூலம், திருநீர் இடுப முக்தி முத்திரை பதிக்கப்பட்டது. வெளியூர்களிலிருந்து வந்த சிவனடியார்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் தங்களது உடம்பில் பச்சை முத்திரை பதித்தனர். 28ம் தேதி பிரளயகாளேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்