SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

2018-04-26@ 14:37:44

மண்ணச்சநல்லூர்: திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் சுவாமி அம்மாளுக்கு திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த வெள்ளியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6ம் நாளான நேற்று நீலிவனேஸ்ரவர், விசாலாட்சி அம்பாள் ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக வசந்த மண்டபத்திலிருந்து திருப்பைஞ்ஞீலி மூவராயன்பாளையம், கவண்டம்பட்டி, ஈச்சம்பட்டி போன்ற கிராமங்களிலிருந்து பக்தர்கள் பழங்கள், பூக்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கோயிலுக்கு எடுத்து வந்தனர்.

தொடர்ந்து சாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோயிலில் சங்கர் குருக்கள் தலைமையில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேரோட்டம் வருகிற சனிக்கிழமையன்று நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஹேமலதா, கோயில் பணியாளர்கள், அனைத்து கிராம பட்டயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்