SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அபிராமி அம்மன் திருக்கல்யாணம்

2018-04-24@ 14:11:33

தரங்கம்பாடி: திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வர கோயில் சித்திரை திருவிழாவையொட்டி திருகல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது. இக்கோயில் திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற தலமாகும்.. மேலும் அபிராமி அம்மனின் அருள்பெற்ற அபிராமி பட்டர் அந்தாதி பாடி அரசனுக்கு அமாவாசையை பவுர்ணமியாக்கி காட்டிய சிறப்பும் திருக்கடையூருக்கு உண்டு.

இக்கோயிலில் காலசம்ஹாரமூர்த்தி எழுந்தருளியிருப்பதால் 60, 70, 80ஆம் ஆண்டு பிறந்த நாளில் இங்கு வந்து ஆயுள்ஹோமம், மிருத்யுஞ்ஜெயசாந்தி செய்து கொள்வது சிறப்புடையதாக கருதப்படுவதால் தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 20ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் 3ம்நாள் விழாவாக அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் திருகல்யாண நிகழ்ச்சி தருமபுரம் இளைய சந்நிதானம் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவில் 5ம் நாள் இன்று சப்பர வீதியுலாவும், 6ம் நாள் நாளை காலசம்ஹார திருவிழாவும், 8ம் நாள் (27ம் ேததி) காலை தேர் திருவிழாவும், மே மாதம் 1ம் தேதி தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sikhs_str11

    சீக்கியர்களின் திருநாளான குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு மத ஊர்வலத்தில் மாணவர்கள் ஆயத்தம்

  • 9thday_thiru1

    கார்த்திகை தீபத்திருவிழாவின் 9ம் நாள் : விநாயகர் முஷிக வாகனத்திலும் சந்திரசேகரர் புருஷாமுனி வாகனத்திலும் வீதி உலா

  • saalai_mari111

    குடிநீர், மின்சாரம் கேட்டு கூத்தாநல்லூர் அருகே மக்கள் சாலை மறியல்

  • kajaa_puyal123a

    கஜா புயல் பாதித்த டெல்டா பகுதிகளில் ஆளுநர் ஆய்வு : மக்கள் குறைகளை கேட்டு ஆறுதல் கூறினார்

  • kaarthigai_8mday1

    தி. மலை கார்த்திகை தீபத்திருவிழா : 8ம் நாளில் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்