SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணகுடி சூசையப்பர் திருத்தல விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

2018-04-23@ 14:25:58

பணகுடி: பணகுடி புனித சூசையப்பர் திருத்தல பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். புனித  சூசையப்பர் திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் 22ல் துவங்கி மே 1ம் தேதி  உழைப்பாளர்கள் தினமன்று நிறைவடையும். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலை மறையுரை மற்றும் நற்கருணை  ஆசீர் நடக்கிறது. கொடியேற்றத்தையொட்டி நேற்று காலை  சிறப்பு திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருத்தந்தை தாமஸ் தலைமையில் கொடியேற்றமும் அதைத் தொடர்ந்து சிறப்பு மறையுறை நற்கருணை ஆசீரும் நடந்தது.

மேலும் திருவிழா நாட்களில் அனைத்து சபைகள், அன்பியங்கள், மும்பைவாழ் பணவை  மக்கள், வெளிநாடு வாழ் பணவை மக்கள் யாவரும் திருவிழா ஆராதனை நடக்கிறது. 8ம் திருவிழா காலை திருப்பலியுடன்  புதுநன்மை கொடுக்கப்படும், மாலை நற்கருனை பவனி நடைபெறும். 9ம் திருவிழா  அன்று மாலை நற்கருணை ஆசீர் முடிந்ததும் தேர்பவனி நடக்கிறது. 10ம்  திருவிழாவான இறுதி நாளில் காலை சிறப்பு கூட்டு திருப்பலியும் மாலை  தேர்பவனியும் தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெறும். ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன்ராஜ்  தலைமையில் ஊர் இறைமக்கள் செய்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்