SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வைகையாற்றில் தடம் பதிக்கும் அழகர்

2018-04-23@ 09:40:03

மதுரையில் இருந்து 20 கிமீ தொலைவில் அழகர் மலை உள்ளது. இந்த மலைக்கு திருமாலிருஞ்சோலை, உத்யான சைலம், சோலைமலை, இருங்குன்றம் உள்ளிட்ட பெயர்கள் உள்ளன. இதன் அடிவாரத்தில் தொன்மையான அழகர் கோயில் உள்ளது. மூலவராக அழகர் என அழைக்கப்படும் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இங்கு விநாயகர், ஆண்டாள், சோலைமலை நாச்சியார், சுந்தரவல்லி தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்டோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயில் வளாகத்தில் கொடிமரம் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயிலை கட்டியவர் குறித்து சரிவர விபரங்கள் தெரியவில்லை. கோயிலில் 18ம் படி கருப்பசாமிக்கு தனி சன்னதி உள்ளது. மூடிய நிலையில் உள்ள 18ம் படி கருப்பசாமி சன்னதியின் கதவுகளுக்கு தினமும் பூஜை நடக்கிறது. பக்கவாட்டில் உள்ள நுழைவுவாயில் வழியாக அழகர் சன்னதிக்கு பக்தர்கள் செல்லலாம். சன்னதியின் விமானம் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்த உற்சவம், ஆடி பிரமோற்சவம், ஐப்பசி தலையருவி உற்சவம், மார்கழி திருநாள் உள்ளிட்டவை விசேஷ காலமாகும். இவற்றில் சித்திரை திருவிழா முக்கியமானது. மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் இருந்து சைவ, வைணவ ஒற்றுமையை வலுப்படுத்தவே இந்த விழா நடத்தப்படுகிறது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ள தங்கப்பல்லக்கில், அழகர் மலையில் இருந்து கள்ளழகராக மதுரை புறப்படுகிறார். மதுரை வரும் அழகரை ஏப். 29ம் தேதி இரவில் மூன்றுமாவடி பகுதியில் பக்தர்கள் எதிர்கொண்டு அமர்க்களமாக வரவேற்கின்றனர். இந்த விழா எதிர்சேவை என அழைக்கப்படுகிறது. பின்னர் தல்லாகுளம் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இரவில் தங்குகிறார். மறுநாள் ஏப்.30ம் தேதி அதிகாலையில் தங்க குதிரையில் எழுந்தருளி வைகையாற்றில் இறங்குகிறார். அவரை வீரராகவ பெருமாள் எதிர்கொண்டு வரவேற்கிறார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசனம் செய்கின்றனர்.

குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி, வழிபடுகின்றனர். பின்னர் மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர், அன்றிரவு வண்டியூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலில் தங்குகிறார். இரவு முழுவதும் நடக்கும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். மறுநாள் காலை சேஷ வாகனத்தில், வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்குகிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் அழகரின் தசாவாதார நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் மாலை தல்லாகுளம் பகுதியில் பூப்பல்லக்கில் எழுந்தருளி, அழகர்கோயிலுக்கு புறப்படுகிறார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்