SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-04-21@ 09:29:24

ஏப்ரல் 21, சனி  

சஷ்டி. ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி.  மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப் பல்லக்கில் பவனி. விறல் மீண்ட நாயனார் குருபூஜை. சிங்கிரிகுடி நரசிம்மர்  துவாஜாரோஹணம், சிறுவாச்சூர்மதுரகாளி  அம்மனுக்கு காப்பு கட்டுதல்.

ஏப்ரல் 22, ஞாயிறு  

திருசிராமலை, இலஞ்சி, கடையம், திருவையாறு, திருப்பனந்தாள், திருக்கடவூர், சீர்காழி இத்தலங்களில் தேரோட்டம். திருக்கழுக்குன்றம்  காலை அதிகார நந்தி,  63வர் கிரிபிரதட்சணம். வேதாரண்யம் அகத்திய முனிவருக்கு மணக்கோலக்காட்சி. காஞ்சிபுரம் பிணாயூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத  ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில்  அஷ்டபந்தன ஜீரணோத்தாரண கும்பாபிஷேகம் (காலை 78.30);

ஏப்ரல் 23. திங்கள்

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ் வரர் இருவரும் ரிஷப வாகனத்தில் பவனி. வாஸ்துநாள்  (காலை மணி.8.54  9.30)  திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கருட சேவை. தியாகப்பிரம்மம் ஜனனம்.

ஏப்ரல் 24. செவ்வாய்  

கன்னிகா பரமேஸ்வரி பூஜை. வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பவனி. திருவையாறு ஆத்ம பூைஜ. திருச்சியில் தாயுமானவர் ரத்னாவதிக்கு  தாயாக வருதல்,  திருக்கழுக்குன்றம் இரவு வெள்ளி ரிஷபம், திருமலை திருப்பதி பத்மாவதி தாயார் ஸ்ரீநிவாசப்பெருமாள் பரிணய உற்சவ ஆரம்பம். சென்னை   சைதை  காரணீஸ்வரர் திருக்கோயில் வெள்ளி ரிஷபம், சித்திரை  11, 12 13 கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் சூரிய பூஜை.

ஏப்ரல் 25. புதன்  

வாஸவி ஜெயந்தி. திருஉத்திரகோசமங்கை ஸ்ரீமங்களேஸ்வரி வெள்ளி மஞ்சத்தில் தபசுக்காட்சி. திருக்கடவூர் காலசங்காரம், சீர்காழி, திருச்சி  திருக்கல்யாணம்,  சிங்கிரிகோயில் நரசிம்மர் கருட சேவை. நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை.

ஏப்ரல் 26. வியாழன்  

ஏகாதசி. தூத்துக்குடி ஸ்ரீ நடராஜர் பச்சை சாத்தி புறப்பாடு. திருப்பனந்தாள் திருக்கல்யாணம், இரவு கோரதக் காட்சி, திருமலை திருப்பதி  பத்மாவதி தாயார்  ஸ்ரீநிவாசப் பெருமாள் பரிணய உற்சவ முடிவு, திருக்கழுக்குன்றம் திருத்தேர், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் திருக்கல்யாணம்.

ஏப்ரல் 27. வெள்ளி  

பிரதோஷம். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் தலங்களில் தேரோட்டம்.  மதுரை மீனாட்சி  அம்மன் திருக்கல்யாணம்,  சென்னை சைதை காரணீஸ்வரர் திருக்கோயில் 63வர் இந்திர விமானம், கோயம்பேடு வைகுண்ட வாசபெருமாள் வசந்த உற்சவம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi68bday

  வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

 • losangeleswaterlight

  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

 • vinayagarsilai

  சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

 • mankutstromchina

  தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

 • tirupathififth

  திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்