SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாம்பே காஜா

2018-04-17@ 15:13:27

தேவையான பொருட்கள்:

மைதா மாவு     -     300 gm
சர்க்கரை       -          750 gm
கார்ன் மாவு (சோள மாவு)  -   3 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு கலர்    -     1/4 டீஸ்பூன்
நெய்      -   2 டேபிள் ஸ்பூன்
refined எண்ணை     -  1/2 லிட்டர் (பொரிக்க)
டேபிள் சால்ட்    -      ஒரு சிட்டிகை.

செய்முறை:

மைதா மாவை சிறிது தண்ணீர் தெளித்து, டேபிள் சால்ட் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கார்ன் மாவு நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு பிசைந்து வைத்த மைதா மாவை இரண்டு அல்லது மூன்று அப்பளமாக மேல்லியதாக இட்டுக் கொள்ள வேண்டும். கார்ன் மாவு நெய் கலவையை அப்பளங்களின் ஒரு புறம் முழுமையாக தடவி கொள்ளவும். பின் அப்பளங்களை மேல்லியதாக சுருட்டிக் கொள்ளவும் (ரோல்) . ரோல் செய்த அப்பளங்களை வேண்டிய அளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் (பாம்பே காஜாவின் அளவு துண்டுகளின் அளவை பொருத்தது). வெட்டிய துண்டுகளை மீண்டும் மெல்லிய அப்பளங்களாக இட்டுக் கொள்ளவும். அப்பளத்தை பாதியாக வெட்டி ஒவ்வொரு பாதியையும் இரண்டாக மடித்துக் கொள்ளவும் (முக்கோணமாக).

முக்கோணங்களை அடுப்பில் இருக்கும் எண்ணெயில்  (அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும் ) போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்த பாம்பே காஜாக்களை தயாராக வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு ஒரு நிமிடம் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும். சர்க்கரை பாகு வைக்க : பாம்பே காஜாவிற்கு இரண்டு கம்பி பதம் பாகு நீர்க்க இருக்க வேண்டும். சர்க்கரை முழுகும் அளவுக்கு தண்ணீர் விட்டு, ஆரஞ்சு கலர் சேர்த்து மிதமான சூட்டில் கனமான பெரிய பாத்திரத்தில் கொதிக்க விடவும். பாகை விரலில் தொட்டுப் பார்க்கும் போது இரண்டு நூலாக வரும் போது அடுப்பை அணைக்கவும். பாம்பே காஜா போட்டு எடுக்கும் போது சர்க்கரை பாகு இறுக இறுக சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்