SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஷ்ட தெய்வங்களை வணங்கினால் கூடுதல் பலன்

2018-04-17@ 09:33:24

சித்திரைப் பாவையே உன்றன் வருகையால் தரணி செழிக்க வேண்டும்! செகமே வளம் பெற நன்மழை பெய்தென்றும் தீமைகள் நீங்க வேண்டும். தமிழ் ஆண்டுகள் பிரபவ முதல் அட்சய வரை மொத்தம் 60 என வரையறுக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானுக்கான வழிபாடுகளை செய்வதால் வளம் பெருகும். குறிப்பாக செவ்வாய் கிரக அம்சம் நிறைந்துள்ள முருகன் தலங்களில் வழிபாடுகள் செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம். முருகப்பெருமானின் விரத வழிபாடுகளில் முக்கியமானது சஷ்டி விரதம். மாதம்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளிலும் வரும் சஷ்டி திதி நாட்களில் உபவாசம் இருந்து, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல் நிவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

கார்த்திகை நட்சத்திர நாட்களில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பான பலன்களை தரும். இதுபோன்று புதுச்சேரி மணக்குளவிநாயகர் கோயில், கடலூர் மஞ்சக்குப்பம் விநாயகர் கோயில், அண்ணாநகர் சித்திபுத்தி விநாயகர் கோயில், சிவ ஆலயங்களில் வழிபாடு செய்யலாம். மேலும் தனது இஷ்ட தெய்வங்களை வழிபாடு செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும். சித்திரை மாதம் பிறந்ததுமே தமிழகத்தில் இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. அக்காலம் தே, மா, பலா, வாழை போன்றவை செழித்துக் கொழிக்கும் காலமாகும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும். இதை எடுத்துக் காட்டுவதைப் போல, தமிழகத்தில் வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வசந்தமாக மாறும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-03-2019

  22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • NerthikkadanTriplecane

  பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்