SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீரபத்திரர் தகவல்கள் : ட்வென்ட்டி 20

2013-12-11@ 16:00:48

மந்திர சாஸ்திரங்களில் உருவில் பெரியதாகவும் அட்சர எண்ணிக்கையில் ஆயிரம் கொண்டதாகவும் உள்ள யந்திரம் வீரபத்திரருக்கே உரியது. மற்ற எந்த தெய்வங்களுக்கும் இவ்வளவு பெரிய யந்திரம் இல்லை.

தன்னை அழைக்காமல் அவமதித்து யாகம் செய்த தட்சனின் யாகத்தை அழிக்க பரமேஸ்வரனால் படைக்கப்பட்டவரே வீரபத்திரர்.

ஈசனின் நீலகண்ட விஷத்திலிருந்து ஆயிரம் முகங்கள், இரண்டாயிரம் கரங்கள், அவற்றிற்குரிய ஆயுதங்களோடு மணிமாலைகள், ஆமையோட்டு மாலைகள், பன்றிக்கொம்பு மாலைகள், கபால மாலை அணிந்து வீரபத்திரர் தோன்றினார்.

வீரபத்திரரின் பெருமைகள் ஸ்கந்தபுராணம், சிவமகாபுராணம், காசிக்காண்டம், தக்கயாகப் பரணி, காஞ்சிப் புராணம் போன்ற நூல்களில் குறிப்பிடப்
பட்டுள்ளன.

வீரபத்திரருக்கு தும்பைப்பூ மாலை சாத்தி வழிபட்டால் அவர் நம்மை எதிரிகள் தொல்லைகளிலிருந்து காத்து நம் துன்பங்களை நீக்கி நல்வாழ்வு அளிப்பார் என்பது நம்பிக்கை.

வீரபத்திரருக்கு கரையில்லாத வெள்ளைநிற ஆடைகளே அணிவிக்கப் படவேண்டும் என அவர் பூஜைமுறையில் கூறப்பட்டுள்ளது.

கோபத்தால் உஷ்ணமாக உள்ள வீரபத்திரரை குளிர்விக்க அவர் மேல் வெண்ணெய் சாத்தும் முறை வழக்கத்தில் உள்ளது. மதுரை மீனாட்சி ஆலய கம்பத்தடி மண்டபத்தில் அருளும் வீரபத்திரருக்கு இந்த பிரார்த்தனை விசேஷமாக செய்யப்படுகிறது.

வீரபத்திரர் தேர் வாகனத்தில் விருப்பமுடன் சஞ்சாரம் செய்வதாக ஐதீகம். அவரது தேரை வைதிகத் தேர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன.

சரப புராணத்தில் வீரபத்திரமூர்த்தியே சரபராக மாறி, நரசிம்மரை சாந்தப்படுத்தினார் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் விரதம் வீரபத்திரவிரதம் என போற்றப்படுகிறது. அன்று சிவந்த நிற பூக்களாலும், செஞ்சந்தனத்தாலும் வீரபத்திரரை வணங்க, வாழ்வு வளம் பெறும்.

ஐப்பசி மாத வளர்பிறை அஷ்டமி, மகாஅஷ்டமி என்று அழைக்கப்படும். அன்று தும்பைப்பூ, நந்தியாவட்டைப்பூ, மல்லிகை போன்ற வெண்ணிற மலர்களால் வீரபத்திரரை அர்ச்சித்து வெண்பட்டு சாத்தி வழிபட, அவரது திருவருள் கிட்டும்.

தட்ச யாக சம்ஹாரத் தலமான திருப்பறியலூரில் ஈசன், அகோரவீரபத்திரமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

கும்பகோணம் மகாமகத் தீர்த்தத்தில் கலக்கும் கங்கை முதலிய புண்ணிய நதிகளுக்குக் காவலாக கங்கை வீரபத்திரர் எழுந்தருளியுள்ளார்.

சிங்கப்பெருமாள் கோயிலுக்கு 5 கி.மீ தொலைவிலுள்ள அனுமந்தபுரத்தில் வீரபத்திரர் அருள்கிறார். இவருக்கு வெற்றிலை படல் பிரார்த்தனை செய்வதாக நேர்ந்து கொண்டால் அனைத்து பிரச்னைகளும் தீர்வாகின்றன. துர்தேவதைகளிலிருந்து காப்பவர் இவர்.

அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ஜலவீரபத்திரர், பவனவீரபத்திரர், ரணவீரபத்திரர், உக்ர வீரபத்திரர், உத்தண்ட வீரபத்திரர் என பல வடிவங்களில் இவர் வணங்கப்படுகிறார்.

ஆடிப்பூர நாளன்று வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாத்துவது அநேகமாக எல்லா வீரபத்திரர் ஆலயங்களிலும் நடக்கிறது. அன்று அனுமந்தபுரம் வீரபத்திரருக்கு 12800 எண்ணிக்கை வெற்றிலைகளால் படல் தொடுத்து அலங்கரிக்கின்றனர்.

சென்னை மயிலாப்பூர் மாதவப்பெருமாள் ஆலயத்திற்கெதிரே அபயாம்பிகை எனும் காளி தேவியுடன் வீரபத்திரர் தனிக்கோயில் கொண்டருள்கிறார்.

பல்வேறு தலங்களில் சப்தமாதர்களுக்கு ஒருபுறம் விநாயகரும், மறுபுறம் வீரபத்திரரும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகின்றனர்.

சென்னை ராயபுரம் மாகாளி அம்மன் ஆலயத்தில் ஏழடி உயரமுள்ள வீரபத்திரமூர்த்தி திருவருள் புரிகிறார்.

திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி ஆலய தூணில் அருளும் வீரபத்திரமூர்த்தி பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக அருள்கிறார். இவர்மீதான வீரமாலை எனும் நூல் புதுக்கோட்டை சமஸ்தானபுலவர் ஸ்ரீகேசவபாரதி என்பவரால் பாடப்பட்டுள்ளது.

-ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-02-2020

  26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • speach20

  இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு

 • carnival20

  ஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு

 • mariyaathai20

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

 • viloence20

  டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்