SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிணற்றையே கருவறையாக கொண்டுள்ள பாப்பாத்தி கன்னி அம்மன் திருவிழா

2018-04-16@ 14:49:59

வாலாஜா: வாலாஜா அருகே கிணற்றையே கருவறை கோயிலாக கொண்டுள்ள பாப்பாத்தி கன்னி அம்மன் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்த பாகவெளி கிராமத்தில் கிணற்றையே கருவறையாக கொண்ட பாப்பாத்தி கன்னி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடந்து நேற்றுடன் நிறைவுபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் காலை பகவான் ஸ்ரீஹரி கிருஷ்ண சேவை, பரஞ்சோதி ஆண்டி பகவத் கீதை, தொடர்ந்து நாட்டுப்புற மேளம், வாணவேடிக்கையுடன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் திருவீதி உலா நடந்தது. 2ம் நாளான நேற்று செண்டை மேள இசையுடன் இங்குள்ள ஓம் சக்தி கோயிலிருந்து பக்தர் ஒருவர் தலை மீது அம்மன் வெள்ளி ஊஞ்சல் வைக்கப்பட்டு, திரளான பக்தர்கள் பால் குடம், பூக்கூடை ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து கிணற்றையே கருவறையாக கொண்ட பாப்பாத்தி கன்னி அம்மன் கோயிலுக்கு சென்றனர். பின்னர், விரதம் இருந்த 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் மதியம் 2 மணியளவில் கிணற்றில் இறங்கி பாப்பாத்தி கன்னி அம்மனை வெளியில் எடுக்க தேடினர். ஆனால் மாலை 5 மணி வரை அம்மன் கிடைக்கவில்லை. அப்போது, 10க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அருள் வந்து ஆடினர். அப்போது எதிர்பாராத விதமாக 5.25 மணிக்கு ஒருவர் கையில் அம்மன் சிலை கிடைத்தது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு 15 நிமிடத்திலேயே அம்மன் சிலை கிடைத்தது. இந்தாண்டு 3 மணி நேரத்திற்கு பின்பு தான் அம்மன் சிலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அனைத்து பக்தர்களும் கிணற்றை சுற்றி நின்று வெற்றிலையில் கற்பூரத்தை ஏற்றி கிணற்றில் மிதக்க விட்டனர். பின்னர், வெளியில் எடுக்கப்பட்ட பாப்பாத்தி கன்னி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மனை வெள்ளி ஊஞ்சலில் வைத்து தாலாட்டினார்கள். பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அருள் வந்து ஆடிய பெண்களிடம் அங்கு குடியிருந்த ஏராளமான பக்தர்கள் அருள் வாக்கு கேட்டனர். இரவு 10 மணிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்ட பின்பு மீண்டும் அம்மனை கிணற்றில் மூழ்க விட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அதிசயிக்கதக்க கோயிலை காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், சித்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம் பகுதியில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. திருவிழா முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-12-2018

  14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • asiya_mukesh11

  ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

 • kali_ramnatha11

  மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

 • france_gunmanr1

  பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

 • upnepalmarg

  நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்