ஆஞ்சநேயர் கோயிலில் லட்ச தீப விழா : பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்

2018-04-16@ 14:28:46

மரக்காணம்: மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது சாந்தசொரூப ஆஞ்சநேயர் கோயில். இக்கோயிலில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு 26ம் ஆண்டு லட்ச தீப விழா நடந்தது. இதையொட்டி காலை 7 மணி முதல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு சந்தனக்காப்பு, வடை மாலை அணிவித்தல், துளசி மாலை அணிவித்து கோயில் வளாகத்தில் சிறப்பு யாகங்கள் நடந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அகல் விளக்கில் தீபம் ஏற்றினர்.
மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர். சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த ராவத்தநல்லூர் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் இரவு சாமி வீதியுலா நடந்தது. இதில் சங்கராபுரம், ராவத்தநல்லூர், புதுப்பேட்டை, புதுப்பாட்டு, புதூர், பிரம்மகுண்டம் உட்பட பல கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
ஒசஅள்ளிபுதூர் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா
நாங்குநேரி பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் வெள்ளி அனுமன் வாகனத்தில் சுவாமி வீதியுலா
திருப்புவனத்தில் வைகையில் இறங்கிய திருமால் அழகர்
ஆழ்வார்திருநகரி கோயிலில் கருடசேவை
விராலிமலை கோயிலுக்கு 108 காவடி, பால்குட ஊர்வலம்
மன்னார்குடி காமாட்சி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!
பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!
காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்
டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது
LatestNews
ஏரியில் மூழ்கி 2 நண்பர்கள் பலி
00:17
மே 2ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி டெல்லி பயணம்: பிரதமரை சந்திக்க திட்டம்
21:43
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: டெல்லி அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்கு
21:41
திருச்சி அருகே காரில் கடத்தப்பட்ட பைனான்சியர் தனபால் உளுந்தூர்பேட்டையில் மீட்பு
21:35
தமிழன் கோழை இல்லை, வேண்டிய இடத்தில் வீரத்தை காட்டுவான்: கவிஞர் வைரமுத்து
21:29
சென்னை வியாசர்பாடியில் துப்பாக்கிமுனையில் 2 ரவுடிகள் கைது
21:00