SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஞ்சநேயர் கோயிலில் லட்ச தீப விழா : பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்

2018-04-16@ 14:28:46

மரக்காணம்: மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது சாந்தசொரூப ஆஞ்சநேயர் கோயில். இக்கோயிலில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு 26ம் ஆண்டு லட்ச தீப விழா நடந்தது. இதையொட்டி காலை 7 மணி முதல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு சந்தனக்காப்பு, வடை மாலை அணிவித்தல், துளசி மாலை அணிவித்து கோயில் வளாகத்தில் சிறப்பு யாகங்கள் நடந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அகல் விளக்கில் தீபம் ஏற்றினர்.

மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர். சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த ராவத்தநல்லூர் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர்  கோயிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் இரவு சாமி வீதியுலா நடந்தது. இதில் சங்கராபுரம், ராவத்தநல்லூர், புதுப்பேட்டை, புதுப்பாட்டு, புதூர், பிரம்மகுண்டம் உட்பட பல கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்