SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைகையாற்றில் கள்ளழகர் இறங்க முகூர்த்தகால் நடும் விழா

2018-04-16@ 14:27:39

அலங்காநல்லூர்: மதுரை சித்திரை திருவிழாவையொட்டி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபோவம் 30ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும்விழா தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாக்களில் முக்கியமானது கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவது ஆகும். சித்திரை திருவிழாவையொட்டி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி வரும் 30ம் தேதி நடைபறுகிறது.

இதற்காக கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் அழகர்மலையில் இருந்து மதுரைக்கு 28ம் தேதி மாலை புறப்படுகிறார். இதன் துவக்க நிகழ்ச்சியாக நேற்று காலை 8.50க்கு மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜபதி கோயிலில் முகூர்த்தக்கால் நடும்விழா நடந்தது. ஆயிரம் பொன் சப்பர யாழி முகத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்