SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நத்தம் மாரியம்மன் குதிரை வாகனத்தில் நகர்வலம்

2018-04-16@ 14:27:03

நத்தம்: தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி நத்தத்தில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள்பெற்றனர். தமிழ் புத்தாண்டு விளம்பி ஆண்டு சித்திரை மாதம் 1ம் தேதியையொட்டி நத்தத்தில் உள்ள மாரியம்மன கோயிலில் அம்மன் சர்வ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து நகரின் முக்கிய வீதிகளில் மின்ரதத்தில் ஊர்வலமாக வந்தது. இது கோயிலிலிருந்து புறப்பட்டு பெரியகடைவீதி, தெலுங்கர்தெரு, அரிசி மார்க்கெட் வழியாக மீனாட்சிபுரம் காளியம்மன் கோயில், அவுட்டர் பகுதி சென்று மீண்டும் கோயிலை சென்றடைந்தது.

நகர்வலத்தின் போது பக்தர்கள் ஆங்காங்கே திரண்டு தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர். முன்னதாக அன்று காலையில் இந்து வர்த்தகர்கள் பொதுநல சங்கத்தார் பராசக்தி இல்லத்திலிருந்து மேள, தாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு சென்று அம்மனை வழிபட்டனர். மேலும் புத்தாண்டு தினத்தையொட்டி மாரியம்ன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலுக்கு கூட்டம், கூட்டமாக சென்று அம்மனை வழிபட்டு சென்ற வண்ணம் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்