SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரும்புலிகுறிச்சி மாரியம்மன் கோயிலில் அமுது படையல் திருவிழா

2018-04-16@ 14:25:43

செந்துறை: செந்துறை அருகே உள்ள இரும்புலிகுறிச்சி மாரியம்மன் கோயில் அமுது படையல் திருவிழா  நடைபெற்றது. இரும்புலிக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை அமாவாசை அன்று இக்கோயிலில் அமுது படையல் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்தாண்டு கடந்த 10ம்தேதி காப்பு கட்டுதலுடன் அமுது படையல் திருவிழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று வந்தது. கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் வீடுகளில் விளைந்த நெல், பலா, மாங்காய், மிளகாய், அவரைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுதலால் தங்கமாகவும்,ரொக்கமாவும்  வழங்கினர். அதனை கோயில் நிர்வாகத்தினர் பெற்று ஐந்தாம் நாளான நேற்று மாலை அமுது படையல் விழா நடைபெற்றது.  

முன்னதாக மாரியம்மன், செல்லியம்மன் விநாயகர் அபிஷேகம் நடைபெற்று, அலங்கார செய்யப்பட்டது. இரண்டாயிரத்து ஐநூறு கிலோ அரிசி சமைக்கப்பட்டு சமைக்கப்பட்ட உணவுகளை படையலிட்டு பொதுமக்களுக்கு தானமாக வழங்கினர். இந்த உணவை வாங்கி உண்பதால் குழந்தை பாக்கியம், குடும்பத்தில் செல்வம், மகிழ்ச்சி, விளைச்சல் பெருகும் என்பதால் இரும்புலிகுறிச்சி கிராம மக்கள் மட்டுமின்றி, சிறுகடம்பூர், குமிழியம், பரணம், பிலாக்குறிச்சி, பாளையகுடி உள்ளிட்ட கிராமங்களிலிருந்தும் வந்திருந்த 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அன்னதானம் பெற்று சென்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்