SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அய்யாவாடி, திருவிசநல்லூர் பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சிறப்பு நிகும்பலா மகாயாகம்

2018-04-16@ 14:25:08

திருவிடைமருநதூர்: அய்யாவாடி மற்றும் திருவிசநல்லூரில் உள்ள பிரத்தியங்கிராதேவி கோவிலில் நேற்று சித்திரமாத  அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா மகாயாகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவிடைமருதூர் அடுத்த அய்யாவாடியில் அகஸ்தீஸ்வர பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் பிரத்தியங்கிராதேவி தனிசன்னதியில் எழுந்து அருள்பாளித்து வருகிறார். இக்கோயிலில் நடைபெறும் யாகத்தில்  தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டு செல்கின்றனர்.

யாகத்தில் பக்தர்கள் கொண்டு வரும் மிளகாயை யாகத்தில் போடும்போது எந்தவித காரமும், நெடியும் வெளிடப்படாதது என்பது இக்கோயிலின் தனிசிறப்பு. இந்நிலையில் நேற்று சித்திரை அமாவாசயையொட்டி சிறப்பு யாகம் நடத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. யாகத்தில் சிவாச்சாரியர்கள் தண்டாயுதபாணி, சங்கர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பக்தர்கள் கொண்டுவந்த மிளகாயை யாகத்தில் இட்டு யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிப்பட்டனர்.

இதேபோல திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீசிதம்பரேஷ்வரர் கோயிலில், தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத பிரமாண்டமான  9அடிஉயர முள்ள பிரத்யங்கிராதேவிக்கு நேற்று நிகும்பலா யாகம் நடைபெற்றது. யாகத்தில் பக்தர்கள் கொண்டுவந்த வற்றல் மிளகாய்களை மூட்டை மூட்டையாகவும் மற்றும் ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பல்வேறு பழவகைகள், மூலிகைகள், பட்டுபுடவை யாகத்தில் இட்டு நிகும்பலாயாகம் நடைபெற்றது. பின்னர் மேலதாளங்கள் முழங்க கடம்புறப்பாடு நடந்தது. பின்னர் பிரத்தியங்கிராதேவிககு பல்வேறு திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகாஅபிஷேகமும், பின்னர் சிறப்புமலர் அலங்காரமும் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்