SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் முத்துப்பல்லக்கு வீதியுலா

2018-04-16@ 14:24:32

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் முத்துப்பல்லக்கு விழா விமரிசையாக நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை  நாடியம்மன் கோயில்  பங்குனி பெருந்திருவிழா கடந்த மார்ச் 27ம் தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 3ம் தேதி வரை நாடியம்மன் மூலஸ்தானத்தில் எழுந்தருளி அன்றிரவு சிவிகாரோகணக் காட்சியுடன் பெரியகடைத் தெருவில் உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளினார். கடந்த 3ம் தேதி (செவ்வாய்) முதல் நேற்று முன்தினம் வரை காலை மற்றும் மாலை வேளைகளில் நாடியம்மன் வீதியுலா நடந்தது.

இதில் முக்கிய திருவிழாக்களான 8ம் தேதி காலை நாடியம்பாள் சரஸ்வதி தரிசனத்திலும், இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் வெள்ளி சிம்ம வாகனத்தில் வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சியும்,  இரவு நாடியம்பாள் செட்டித்தெருவிற்கு எழுந்தருளி அங்கு பதுமை பூப்போடும் நிகழ்ச்சியும் நடந்தது. 10ம் தேதி காலை புஷ்ப பல்லக்கில் நவநீதசேவையும், இரவு குதிரை வாகனத்தில் வெண்ணெய்தாழிக்குடத்துடன் வீதியுலாவும் நடந்தது. 11ம் தேதி காலை நாடியம்பாள் மூலஸ்தானத்திற்கு சென்று அன்றைய தினம் மாவிளக்கு திருவிழா நடந்தது. இதில் பட்டுக்கோட்டை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு வைத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து 12, 13ம் தேதிகளில் தேரோட்டம் நடந்தது.

நேற்று முன்தினம் 14ம் தேதி காலை நாடியம்மன் மீனாட்சி அம்மன் தரிசனத்திலும், இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கு தியுலாவும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய நாடியம்மனின் முத்துப்பல்லக்கு வீதியுலா மண்டகப்படியிலிருந்து புறப்பட்டு வடசேரிரோடு, பிள்ளையார்கோயில் தெரு, பெரியதெரு, தலையாரிதெரு, தேரடித்தெரு, பெரியகடைத்தெரு, மார்க்கெட், சாமியார்மடம் வழியாக கோட்டை சிவன்கோயில் தெருவில் உள்ள சிவன் கோயிலை நேற்று அடைந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து நாடியம்மனை வழிபட்டு சென்றனர். திருவிழா முடிவடைந்ததையொட்டி பக்தர்கள் மீது மஞ்சள்நீர் தெளிக்கப்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்