SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் : பங்குனி பெருந்திருவிழாவில் தெப்பத்தேரோட்டம்

2018-04-16@ 14:24:03

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவில் தெப்பத்தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 13ம் தேதி கம்மவார் சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் தேரோட்டமும், நேற்று முன்தினம் தீர்த்தவாரி திருவிழாவும் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் நடந்தது.

இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து காலை 10.40 மணிக்கு கோயிலில் வைத்து யாகசாலை பூஜையும், அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேளதாளம் முழங்க அம்பாள் வீதி உலா புறப்பட்டு அடைக்கலம்காத்தான் மண்டபம் சென்றடைந்தது. தொடர்ந்து அங்கிருந்து அம்பாள் வீதி உலா புறப்பட்டு தெப்பத்திற்கு வந்தடைந்து. இரவு 8.15 மணியளவில் தெப்பத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் 9 முறை உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தல் வைபவமும் நடந்தது.

விழாவை முன்னிட்டு இரவில் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் அடைக்கலகாத்தான் மண்டபம் அருகே இன்னிசை கச்சேரியும், நாடார் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் அன்னதானமும் நடந்தது. கோயில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியராஜன், தலைமை எழுத்தர் ராமலிங்கம், நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம், சங்க துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், தெப்ப தேர்த்திருவிழா கமிட்டியை சேர்ந்த முருகன், ஜோதிபாசு, பாலமுருகன், சீனிவாசன், சோலையப்பன், மாணிக்கம், சத்திய
மூர்த்தி, சண்முகசுந்தரம், சந்திரசேகர், வைத்தியலிங்கம், தெய்வேந்திர பூபதி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்