SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு

2018-04-16@ 14:23:05

சீர்காழி: சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு தமிழ்  வருட பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.63 நாயன்மார்களை போற்றி வழிபாடு செய்தால் சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வாழ்வில் பல்வேறு நன்மைகளை வழங்குவதாக பக்தர்களின் நம்பிக்கையாக விளங்குகிறது. 63 நாயன்மார்கள் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர். தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

இதனையொட்டி பால், வாசனை திரவியங்கள் மற்றும் இளநீர் ஆகிய பொருட்களால் அபிவேஷமும், மலர் அலங்காரமும் செய்யபட்டது. பின்னர் தீபராதணை காண்பிக்கபட்டது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், அர்ச்சகர் பட்டாபிராமக்குருக்கள், நாயன்மார்கள் வழிபாட்டு மன்றத்தலைவர் பாபு, துணைத்தலைவர் சங்கர், இணை செயலாளர்கள் அம்பேத், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் பக்தர்கள் செய்திருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்