SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்கால் புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவில் 5 தேர் பவனி

2018-04-16@ 14:22:09

காரைக்கால்: காரைக்கால் தருமபுரத்தில் உள்ள புனித செபஸ்தியார் கோயில் ஆண்டுத்திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு 5 தேர்பவனி நடைபெற்றது. காரைக்கால் புனித செபஸ்தியார் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆண்டுத்திருவிழா ஏப்ரல் 6ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், தருமபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பங்கு மக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, விழா முடியும் வரை, தினசரி மாலை சிறிய தேர் பவனியும், திருப்பலியும் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்சியாக, கடந்த 13ம் தேதி இரவு மூன்று பெரிய தேர் பவனியும், நேற்று முன்தினம் (14ம் தேதி) இரவு 5 பெரிய மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. தருமபுரம், மற்றும் தக்களுர் கிராமங்களின் முக்கிய வீதிகளை கடந்து வந்த தேர் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. நிறைவு நாளான நேற்று 2 சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.  விழா ஏற்பாடுகளை, தருமபுரம் மற்றும் தக்களூர் கிராம பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்