SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சித்திரை மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?

2018-04-14@ 10:31:42

சித்திரை 1, ஏப்ரல் 14, சனி.

த்ரயோதசி. மாத சிவராத்திரி. திருச்சி உச்சிப் பிள்ளையார் பாலாபிேஷகம். மதுரை மீனாட்சியம்மன் வைரக்கிரீடம் சாற்றுமுறை. விளம்பி வருஷ பிறப்பு. விஷு புண்யகாலம். திருச்சி உச்சிப்பிள்ளையார் பாலாபிஷேகம், விழுப்புரம் ஆஞ்சநேயர் லக்ஷதீபம், திருச்செந்தூர் ஷண்முகர் அன்னாபிஷேகம், ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் ரிஷப வாகனக் காட்சி. காஞ்சி காமாக்ஷி அம்பாள் தங்கரதம், சென்னை குரோம்பேட்டை குமரன்குன்றம் திருப்படி உற்சவம். ஒலிமங்கலம் மாரியம்மன் மஞ்சள் நீர் உற்சவம் . திருவையாறு பிரசன்ன மகாகணபதி பூஜை. ஸ்ரீவிபூதி சாய்பாபா ஆராதனை. பஞ்சாங்க படனம். கானூர் 6வர் குருபூஜை. கட்டிமாங்காடு மகாதேவர் கோயில் விஷுகனி.

சித்திரை 2, ஏப்ரல் 15, ஞாயிறு.

சதுர்த்தசி. சர்வ அமாவாசை. திருசிராமலை ஸ்ரீசிவபெருமான் கற்பக விருக்ஷ வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

சித்திரை 3, ஏப்ரல் 16, திங்கள்.

பிரதமை. திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம். சமயபுரம்  ஸ்ரீமாரியம்மன் வெள்ளிக் குதிரையில் புறப்பாடு. அமாசோம அரசமர பிரதட்சிணம்.

சித்திரை 4, ஏப்ரல் 17, செவ்வாய்.

துவிதியை. சந்திர தரிசனம். வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் உற்சவாரம்பம். சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை. திருச்செங்காட்டாங்குடி அமுதுபடையல், சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனுக்கு பூச்சொறிதல். சமயபுரம் தேர்.

சித்திரை 5, ஏப்ரல் 18, புதன்.

அக்ஷய த்ருதியை.  கார்த்திகை விரதம். பலராம ஜெயந்தி. திருசிராமலை ரத்தினாவதி அம்மையாருக்கு திருத்துழாய் வழங்குதல். வேளூர் கிருத்திகை, கும்பகோணம் பெரிய தெருவில் 12 கருடசேவை, மன்னார்குடி கருடசேவை. சித்திரை 5, 6, 7 ஆடுதுறை ஆபத்ஸஹாயேஸ்வரர் கோயிலில் சூரிய பூஜை. ஸ்ரீஸ்யாமா சாஸ்திரிகள் ஜனன உற்சவம்.

சித்திரை 6, ஏப்ரல் 19, வியாழன்.

சதுர்த்தி. வார்த்தா கெளரி விரதம். கரிநாள். மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பூத, அன்ன வாகனத்தில் திருவீதிவுலா. மங்கையர்க்கரசியார் குருபூஜை. சூரியனார் கோயில் சிவாக்கிர யோகிகள் குருபூஜை, ஸ்ரீரங்கம் கோடைத்திருநாள்.

சித்திரை 7, ஏப்ரல் 20, வெள்ளி.

பஞ்சமி. ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தோரு விநாயகர் அன்ன வாகனத்தில் பவனி. சீர்காழி, திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு, திருச்சி தலங்களில் சித்திரைப் பெருவிழா ஆரம்பம். திருப்பாதிரிபுலியூர் வசந்தோற்சவம், திருக்கழுக்குன்றம் பிரம்மோத்சவ கொடியேற்றம். சமயபுரம் தெப்பம்.

சித்திரை 8, ஏப்ரல் 21, சனி.

சஷ்டி. ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப் பல்லக்கில் பவனி. விறல் மீண்ட நாயனார் குருபூஜை. சிங்கிரிகுடி நரசிம்மர் துவாஜாரோஹணம், சிறுவாச்சூர் மதுரகாளி  அம்மனுக்குக் காப்பு கட்டுதல்.

சித்திரை 9, ஏப்ரல் 22, ஞாயிறு.

சப்தமி. திருசிராமலை, இலஞ்சி, கடையம், திருவையாறு, திருப்பனந்தாள், திருக்கடவூர், சீர்காழி இத்தலங்களில் தேரோட்டம். திருக்கழுக்குன்றம் காலை அதிகார நந்தி, 63வர் கிரிபிரதட்சணம். வேதாரண்யம் அகத்திய முனிவருக்கு மணக்கோலக்காட்சி.

சித்திரை 10, ஏப்ரல் 23. திங்கள்.

அஷ்டமி. மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் இருவரும் ரிஷப வாகனத்தில் பவனி. வாஸ்து நாள் (காலை மணி.8.54  9.30)  திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கருட சேவை. தியாகப்பிரம்மம் ஜனனம்.

சித்திரை 11, ஏப்ரல் 24. செவ்வாய்.

நவமி. கன்னிகா பரமேஸ்வரி பூஜை. வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பவனி. சிவஞான சுவாமிகள் குருபூஜை. திருவையாறு ஆத்ம பூைஜ திருச்சியில் தாயுமானவர் ரத்னாவதிக்கு தாயாக வருதல், தருமை ஆதீனம் 20வது குருமஹா சந்நிதானம் ஜென்ம நட்சத்திர விழா. திருக்கழுக்குன்றம் இரவு ஆதீனம் 26வது குருமஹா சந்நிதானம் ஜென்ம நட்சத்திர விழா, திருக்கழுக்குன்றம் இரவு வெள்ளி ரிஷபம், திருமலை திருப்பதி பத்மாவதி தாயார் ஸ்ரீநிவாசப்பெருமாள் பரிணய உற்சவ ஆரம்பம். சென்னை சைதை காரணீஸ்வரர் திருக்கோயில் வெள்ளி ரிஷபம். சித்திரை 11, 12, 13ஆகிய தேதிகளில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் சூரியபூஜை.

சித்திரை 12, ஏப்ரல் 25. தசமி. புதன்.  

வாஸவி ஜெயந்தி. திருஉத்திரகோசமங்கை ஸ்ரீமங்களேஸ்வரி வெள்ளி மஞ்சத்தில் தபசுக்காட்சி. திருக்கடவூர் காலசங்காரம், சீர்காழி, திருச்சி திருக்கல்யாணம், சிங்கிரிகோயில் நரசிம்மர் கருட சேவை. நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை.

சித்திரை 13, ஏப்ரல் 26. வியாழன்.

ஏகாதசி. தூத்துக்குடி ஸ்ரீநடராஜர் பச்சை சாத்தி புறப்பாடு. திருப்பனந்தாள் திருக்கல்யாணம், இரவு கோரதக் காட்சி, திருமலை திருப்பதி பத்மாவதி தாயார் ஸ்ரீநிவாசப் பெருமாள் பரிணய உற்சவ முடிவு, திருக்கழுக்குன்றம் திருத்தேர், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் திருக்கல்யாணம், ரிஷப வாகனம்.

சித்திரை 14, ஏப்ரல் 27. வெள்ளி.

துவாதசி. பிரதோஷம். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் தலங்களில் தேரோட்டம்.  மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், சென்னை சைதை காரணீஸ்வரர் திருக்கோயில் 63வர் இந்திர விமானம், கோயம்பேடு வைகுண்ட வாசபெருமாள் வசந்த உற்சவம்.

சித்திரை 15, ஏப்ரல் 28. சனி.

த்ரயோதசி. ஸ்ரீ நரஸிம்ம ஜெயந்தி. கரிநாள். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் எதிர் சேவை. உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை. சீர்காழி முத்துசட்டை நாதர் உற்சவம்.

சித்திரை 16, ஏப்ரல் 29. ஞாயிறு.

சித்ரா பெளர்ணமி. புத்த பூர்ணிமா. மதுரை ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப சேவை. இசைஞானியார் குருபூஜை. மதுரகவியாழ்வார். சித்ரகுப்த பூஜை. ஸ்ரீரங்கம் கஜேந்திர மோட்சம். எட்டுக்குடி, மஞ்சள்வயல் பால்காவடி அபிஷேகம், சிங்கிரிகுடி நரசிம்மர் திருத்தேர், திருவஹிந்திரபுரம் தேவநாதஸ்வாமி திருத்தேர், திருவண்ணாமலை கிரிவலம். 29.4.2018 காலை 7.00 முதல் 3042018 காலை 6.54 மணி வரை. காஞ்சி வரதர் தேவராஜ  ஸ்வாமி நடப்பாவி உற்சவம், சைதை காரணீஸ்வரர் தீர்த்தவாரி, இரவு திருக்கல்யாணம். திருமுல்லைவாயில் பச்சையம்மன் மஹாபிஷேகம். சம்பத்கெளரி விரதம்.

சித்திரை 17, ஏப்ரல் 30. திங்கள்.

வைசாக பஹுள பிரதமை. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் எழுந்தருளல். திருக்குறிப்புத் தொண்டர் குருபூஜை. திருச்சானூர் பத்மாவதி தாயார் வசந்த உற்சவ முடிவு, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் முருக்கடி சேவை திருவையாறு சப்தஸ்தானம். ஆ.கா.மா.வை.  எட்டுக்குடி தலத்தில் தேர்.

சித்திரை 18, மே 1. செவ்வாய்.

துவிதீயை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. திருவையாறு சப்தஸ்தானம்.

சித்திரை 19, மே 2. புதன்.

திருதியை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் மலைக்குப் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பவனி. சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் திருக்கல்யாண உற்சவம்.

சித்திரை 20. மே 3. வியாழன்.

சங்கடஹரசதுர்த்தி. சென்னை ஸ்ரீசென்னகேசவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம். தங்கப் பல்லக்கில் பவனி வரும் காட்சி. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருத்தேர், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் பஞ்சமூர்த்தி உற்சவம்.

சித்திரை 21, மே 4. வெள்ளி.

பஞ்சமி. சோளிங்கர் லட்சுமி நரசிம்மப் பெருமாள் கண்ணாடிப் பல்லக்கில் பவனி. அக்னி நட்சத்திரம் ஆரம்பம். காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் பாலூரில் திருவூரல் உற்சவம்.

சித்திரை 22, மே 5. சனி.

சஷ்டி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் உற்சவாரம்பம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் வசந்த மண்டப உற்சவாரம்பம். ஸ்ரீரங்கம் விருப்பன் திருநாள் தொடக்கம்.

சித்திரை 23, மே 6. ஞாயிறு.

சப்தமி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

சித்திரை 24, மே 7. திங்கள்.

அஷ்டமி. திருவோண விரதம், நடராஜர் அபிஷேகம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. சித்தர்காடு காழிச்சிற்றம்பல நாடிகள் குருபூஜை.

சித்திரை 25, மே 8. செவ்வாய்.

நவமி. காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் உற்சவாரம்பம். வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா. திருப்பதி கங்காஜாத்ரா ஆரம்பம், ஸ்ரீகருட சேவை.

சித்திரை 26, மே 9. புதன்.

தசமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், சென்னை சென்னகேசவப் பெருமாள் தலங்களில் விடையாற்று உற்சவம். திருநாவுக்கரசர் குருபூஜை. அப்பர் சுவாமிகள் திருப்புகலூரில் பின்னிரவு விடியல்.

சித்திரை 27, மே 10. வியாழன்.

வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பப் பல்லக்கில் பவனி.

சித்திரை 28, மே 11. வெள்ளி.

ஏகாதசிதுவாதசி. காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் கைலாச வாகனத்தில் திருவீதியுலா. சென்னை சென்னகேசவப் பெருமாள் விடையாற்று உற்சவம்.

சித்திரை 29, மே 12.சனி.

திரயோதசி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் விடையாற்று உற்சவம். ஞானசுந்தரபிரம்மம் குரு பூஜை.

சித்திரை 30, மே 13. ஞாயிறு.

சதுர்த்தசி. பிரதோஷம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தேரோட்டம். கும்பகோணம் ராமர் திருமஞ்சனம், ஸ்ரீரங்கம் தேர். திருவண்ணாமலை ஸ்ரீரணமகரிஷி ஆராதனை.

சித்திரை 31, மே 14. திங்கள்.


போதாயன அமாவாசை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் ஸப்தாவரணம் சாற்றுமுறை, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. நரசிம்ம ஜெயந்தி.

தொகுப்பு: ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்