SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்!

2018-04-14@ 10:12:48

‘‘உங்களுடைய குற்றங்களையும், பாவங்களையும் முன்னிட்டு நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். அப்பொழுது நீங்கள் இவ்வுலகப் போக்கின்படி வான
வெளியில் அதிகாரம் செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப்  பணிந்து நடந்தீர்கள். இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லோரும் இருந்தோம். நம்முடைய ஊனியல்பின் தீய நாட்டங்களின்படி வாழ்ந்து, உடலும்,  மனமும் விரும்பியவாறு செயல்பட்டு மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாக கடவுளின் சினத்துக்கு ஆளானோம். ஆனால், கடவுள் மிகுந்த இரக்கம்  உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச்  செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே.

இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும், விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள்  நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனிவரும் காலங்களிலும் எடுத்துக்காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். நீங்கள்  அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல. மாறாக, இது கடவுளின் கொடை. இது மனித செயல்களால்  ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில், நாம் கடவுளின் கை வேலைப்பாடு. நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு  வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.’’  (எபேசியர் 2:110)
இரண்டு சேவல்களுக்குள் சண்டை. யார் கோழிக்கூட்டத்துக்கு தலைவனாக இருப்பது என்று. மற்ற கோழிகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவை கேட்கவில்லை. இரண்டும் சண்டையிட்டு எந்த சேவல் ஜெயிக்கிறதோ அதுவே தலைவராகலாம் என்று முடிவு செய்து சண்டை போட ஆரம்பித்தன.

முரட்டுச் சேவல் மற்றொரு சேவலை ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொன்று போட்டது. அடுத்ததைக் கொன்றதில் அதற்குப் பெருமை தாங்கவில்லை. ‘நானே  தலைவன்’ என்று கொக்கரித்தது. அங்கே இங்கே ஓடி எல்லா இடத்திலும் சொல்லி தன் வீரத்தைத் தம்பட்டம் அடித்துக் கொண்டது. தலைகால் புரியாமல்  பரபரத்துக் கொண்டிருந்தது. ‘‘ஆஹா! என்னை வெல்ல ஆளே கிடையாது’’ என்று கர்வத்துடன் கூவியது. இதெல்லாம் போதாமல் ஒரு வீட்டின் கூரைமேல்  ஏறியது. அங்கிருந்து சத்தமாய் ‘‘நானே கோழிகளுக்கு ராஜா’’ என்று கத்தியது. அப்போது அந்தப் பக்கமாய்  பறந்துகொண்டிருந்த கழுகு ஒன்று சேவலின்  சத்தம் கேட்டு கீழே பார்த்தது. சர்ரென்று பறந்து வந்து சேவலைக் கொத்தித் தூக்கிச்சென்றது. அதிகம் அலட்டிக் கொண்டதால் சேவல் பரிதாபத்திற்குரிய நிலைக்கு  ஆளானது. யாருக்கும் தீமை செய்யாதீர்கள். இதுவே உண்மையான தானதர்மம் ஆகும். தொலைவில் இருக்கும் மரத்தைப் பாருங்கள். மக்கள் தன்மீது அடுத்தடுத்து  கல்லெறிந்து தாக்கினாலும் மரம் என்ன செய்கிறது? ருசியான பழங்களைத் தருகிறது. ஒரு மனிதன் உங்களைப் புண்படுத்தினால் நீங்கள் அவர்களிடம் பூரணமாக  அன்பு காட்டுங்கள். ஒவ்வொரு அன்பான செயலும், ஒவ்வொரு அன்பான சொல்லும் பிறரை மகிழ்விக்கும் நல்ல நடத்தையும் அதன் செயல்கள் ஆகும்.

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-08-2018

  16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-08-2018

  15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaearthquake

  சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

 • meteorshower

  ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

 • indonesiaafterquake

  இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்