SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-04-14@ 10:07:30

ஏப்ரல் 14, சனி  

விளம்பி வருஷ பிறப்பு. விஷு புண்யகாலம். மாத சிவராத்திரி. திருச்சி உச்சிப் பிள்ளையார் பாலாபிஷேகம். மதுரை மீனாட்சியம்மன் வைரக்கிரீடம் சாற்றுமுறை. விழுப்புரம் ஆஞ்சநேயர் லக்ஷதீபம், திருச்செந்தூர் ஷண்முகர் அன்னாபிஷேகம், ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் ரிஷபம். காஞ்சி காமாக்ஷி அம்பாள் தங்கரதம், சென்னை குரோம்பேட்டை குமரன்குன்றம் திருப்படி உற்சவம். ஒலிமங்கலம் மாரியம்மன் மஞ்சள் நீர் உற்சவம். திருவையாறு பிரசன்ன மகாகணபதி பூஜை. ஸ்ரீவிபூதி சாய்பாபா ஆராதனை. பஞ்சாங்க படனம். கானூர் 63வர் குருபூஜை. கட்டிமாங்காடு மகாதேவர் கோயில் விஷுகனி.

ஏப்ரல் 15, ஞாயிறு  

சர்வ அமாவாசை. திருசிராமலை ஸ்ரீ சிவபெருமான் கற்பக விருஷ வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

ஏப்ரல் 16, திங்கள்  

திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம். சமயபுரம்  ஸ்ரீ மாரியம்மன் வெள்ளிக் குதிரையில் புறப்பாடு. அமாசோம அரசமர பிரதட்சிணம்.

ஏப்ரல் 17, செவ்வாய்  

சந்திர தரிசனம். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் உற்சவாரம்பம். சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை. திருச்செங்காட்டாங்குடி அமுதுபடையல், சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனுக்கு பூச்சொறிதல். சமயபுரம் தேர்.

ஏப்ரல் 18, புதன்  

அக்ஷய திருதியை.  கார்த்திகை விரதம். பலராம ஜெயந்தி. திருசிராமலை ரத்தினாவதி அம்மையாருக்கு திருத்துழாய் வழங்குதல். வேளூர் கிருத்திகை, கும்பகோணம் பெரிய தெருவில் 12 கருடசேவை, மன்னார்குடி கருடசேவை. சித்திரை 5, 6, 7 ஆடுதுறை ஆபத்ஸஹாயேஸ்வரர் கோயிலில் சூரிய பூஜை. ஸ்ரீஸ்யாமா சாஸ்திரிகள் ஜனன உற்சவம்.

ஏப்ரல் 19, வியாழன்  

சதுர்த்தி. வார்த்தா கெளரி விரதம்.  மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் பூத அன்ன வாகனத்தில் திருவீதிவுலா. மங்கையர்க்கரசியார் குருபூஜை. சூரியனார்  கோயில் சிவாக்கிர யோகிகள் குருபூஜை, ஸ்ரீரங்கம் கோடைத்திருநாள்.

ஏப்ரல் 20, வெள்ளி  

ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தோரு விநாயகர் அன்ன வாகனத்தில் பவனி. சீர்காழி, திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு, திருச்சி தலங்களில் சித்திரைப் பெருவிழா ஆரம்பம். திருப்பாதிரிபுலியூர் வசந்தோற்சவம், திருக்கழுக்குன்றம் பிரம்மோற்சவ கொடியேற்றம். சமயபுரம் தெப்பம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • newyork

  நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

 • singaporebirds

  சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

 • turkey

  துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

 • climate

  ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

 • 25-06-2019

  25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்