SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகேஸ்வரமுடையார் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

2018-04-12@ 14:52:38

சீர்காழி: சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்  நடைபெற்றது. சீர்காழியில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட ஆதி ராகு ஸ்தலமான பொன்னாகவல்லி அம்மன் சமேத நாகேஸ்வரமுடையார் கோயில் உள்ளது. இக்கோயிலில் அமிர்த ராகு பகவான், சனீஸ்வர பகவான் தனது மனைவி நீலாதேவியுடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். ராகு, கேது தோன்றிய தினமான பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி சுவாமிஅம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

முன்னதாக முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் சீர்வரிசை எடுத்துக்கொண்டு கோயிலை வந்தடைந்தனர். அதன் பின்னர் சுவாமிஅம்மன் தனி, தனியாக பல்லக்கில் வைத்து மாலை மாற்று வைபவம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சுவாமிஅம்மன் எழுந்தருள, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கி சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கலநானை அம்மனுக்கு அணிவித்து திருக்கல்யாண உத்தவமும், சுவாமிஅம்மனுக்கு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிக்கு மொய் எழுதி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவத்தை சிவாச்சாரியார்கள் முத்துக்குருக்கள், பஞ்சாபிகேஷன், ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்