SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோழப்பன்பண்ணை சாஸ்தா கோயில் பூக்குழி வைபவம்

2018-04-11@ 14:31:30

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே  தோழப்பன்பண்ணை பொய்சொல்லாமெய்யன் சாஸ்தா கோயில்  பங்குனி உத்திர திருவிழாவில் பூக்குழி வைபவம் நடந்தது. இதில் திரளானோர் அக்னிகுண்டத்தில் இறங்கி நேர்த்திக்  கடன் செலுத்தினர். தோழப்பன்பண்ணை பொய்சொல்லாமெய்யன் சாஸ்தா கோயிலில் பங்குனி  உத்திர திருவிழா கடந்த மார்ச் 30ம் தேதி துவங்கியது.

கடந்த 5ம் தேதி பெரியசாமி குருபூஜையை முன்னிட்டு சுவாமி பொய்சொல்லாமெய்யன் சாஸ்தா  கோயிலுக்கு ஸ்ரீவைகுண்டம் மேல அரசாழ்வார்கோயில் தெருவில் உள்ள பிள்ளைமார் சமுதாய கோயிலில் இருந்து பொன், வெள்ளி ஆபரணங்களுடன்  நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.  இதன்தொடர்ச்சியாக பூக்குழி வைபவம் நேற்று இரவு நடந்தது. இதில் திரளானோர் அக்னிகுண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத்,  அர்ச்சகர் பாலசுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்