SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திண்டுக்கல் மேட்டுபட்டியில் புனித வியாகுல அன்னை ஆலயத்தின் பாஸ்கு திருவிழா

2018-04-09@ 14:18:09

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 330 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித வியாகுல அன்னை ஆலயத்தின் பாஸ்கு திருவிழா நடந்தது.ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 96 பட்டிகளின் தாய் கிராமமாக விளங்கக்கூடிய மேட்டுப்பட்டியில் ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் பாஸ்கு திருவிழா நடந்தது. முதல் நாள் பாடுகளின் பாஸ்கு, இதில் ஏசு இறுதியில் மரித்தவுடன் அவரை தூக்கிச் செல்வதர்காக திரு உடல் தாங்கிய பூக்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட தூம்பா ஊர்வளம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று மரித்த ஏசு உயிர்ப்பு பாஸ்கு நடைபெற்றது. இதில் உயிர்த்த ஆண்டவர், குழந்தை ஏசு, அந்தோணியார், சந்தியாகப்பர், ஜெபஸ்தியார், சவேரியார், வியாகுலமாதா, சூசையப்பர், வில்லியனூர்மாதா ஆகிய 9 தெய்வங்கள் அடங்கிய தேர் பவனியை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி ஆகியோர் துவங்கி வைத்தனர். நகரின் நான்கு வீதிகள் வழியாக தேர் பவனி நடைபெற்று இறுதியில் புனித வியாகுல அன்னை ஆலயம் வந்து பின்பு நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் வான வேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது. இதில் திண்டுக்கல் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தேர் வரும் நான்கு ரதவீதிகளில் மதசார்பில்லாமல் அனைவரும் தங்களின் துன்பங்கள் கரைந்து போக வேண்டும் என்பதற்காக உப்பு, மிளகு தூவி வழிபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்