SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூலவர் அகஸ்தீஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் : கிராம மக்கள் திரண்டு தரிசனம்

2018-04-06@ 14:39:36

சிப்காட்: ராணிப்பேட்டை அருகே பொன்னீஸ்வரர் கோயிலில் மூலவர் அகஸ்தீஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நேற்று காலை நடைபெற்றது. இதனை கிராம மக்கள் திரண்டு தரிசனம் செய்தனர். காட்பாடி தாலுகா, விண்ணம்பள்ளி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தில் கட்டப்பட்ட அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் என்ற பொன்னீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு பங்குனி உத்திராயனத்தில் நேற்று முதல் 14ம் தேதி வரை காலை 6 மணி முதல் 6.30 வரை சூரிய பகவான் மூலவர் சிவபெருமானை தரிசிக்கும் காட்சி நடைபெறுகிறது.

இதனை பக்தர்கள் தரிசனம் செய்வதால் 7 பிறவிகளில் செய்த வினைகள் தீரும் என்பது ஐதீகம். இந்த அதிசய நிகழ்வினை இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் தரிசனம் செய்து வருகின்றனர். சூரிய ஒளி தரிசனத்திற்கு பிறகு சிறப்பு அபிஷேகம், அலங்கராம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்