SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடையாளூர் காளியம்பாள் கோயிலில் முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி

2018-04-06@ 14:38:54

கும்பகோணம்:  உடையாளூரில் உள்ள காளியம்பாள் கோயிலில் முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தரகள் பங்கேற்று சுவாமியை தோளில் தூக்கி சென்று வழிபட்டனர். கும்பகோணம் அடுத்த உடையாளூரில் பால்குளத்தி அம்பாள், காளியம்பாள், அய்யனார் கோயில்கள் உள்ளது. இந்த கோயில்கள் கைலாசநாதர், லட்சுமி நாராயணபெருமாள் கோயிலுக்கு உட்பட்டதாகும். இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி துவங்கியது.

இதை தொடர்ந்து தினம்தோறும் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பால்குளத்தி அம்பாள், செல்வமகாகாளி அம்பாள், அய்யனார் சுவாமிகள் புறப்பாடு நடந்தது. இதைதொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மதியம் 12 மணிக்கு முன்னோட்டம்பின்னோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தரகள் கலந்து கொண்டனர். பின்னர் குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்