SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முசிறி அழகுநாச்சியம்மன் கோயில் தேர்திருவிழா

2018-04-05@ 14:26:08

தா.பேட்டை:  முசிறி பரிசல்துரை ரோட்டில் உள்ள அழகுநாச்சியம்மன் கோயிலில் தேர்திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அழகுநாச்சியம்மன் கோயிலில் திருக்காப்பு கட்டுதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவு அழகுநாச்சியம்மனை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர் முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கிடா வெட்டு பூஜை, பொங்கல் பூஜை, மாவு பூஜை ஆகியவை நடத்தினர். விழாவில் முசிறி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்