SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்

2018-04-05@ 14:18:29

தக்கலை: வேளிமலை குமாரகோவிலில் திருக்கல்யாண விழா நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் திருவிளக்கு பூஜை, இரவு முருக பெருமானுக்கும், வள்ளி நாயகிக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (4ம் தேதி) 2ம் நாள் விழாவில் திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக காலையில் சுவாமி வள்ளிக்குகை அருகில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். மதியம் சுவாமி வள்ளி நாயகியுடன் மலையில் இருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளும் போது குறவர் படுகளம் நடந்தது. குறவர் படுகளத்தின் இறுதியில் முருக பெருமானிடம் குறவர்கள் சரணடைந்தனர். இந்நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் பார்வையிட்டனர்.

இரவு 7 முதல் 8 மணிக்குள் முருக பெருமானுக்கும், வள்ளி நாயகிக்கும் திருக்கல்யாண முகூர்த்தம்  நடைபெற்றது. முன்னதாக திருக்கல்யாணத்துக்குரிய தாலி, பட்டு உள்ளிட்ட சீர் பொருட்கள் நார் பெட்டியில் வைத்து தேர் வீதியில் ஊர் அழைப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வு முடிந்ததும் சுவாமிக்கு தீபாராதணை காட்டப்பட்டதும் மூலஸ்தானத்தில் முருக பெருமானுக்கும், வள்ளி தேவிக்கும் திருக்கல்யாணத்தை கோயில் மேல்சாந்தி வேணுகுமார் போற்றி மாங்கல்யத்தை மாற்றி நடத்தி வைத்தார். பின்னர் கோயில் கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் வைத்து முருக பெருமானுக்கும், வள்ளி தேவிக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை ஆகம விதிப்படி கோயில் போற்றிகள் நடத்தி வைத்தனர்.

திருமணம் முடிந்ததும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றவர்களுக்கு தேன், தினைமாவு, அமிர்தம், லட்டு, மாங்கல்யம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு சுவாமி வெள்ளிக்குதிரையிலும், அம்மன் பூப்பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளினர். விழாவின் போது அறநிலையத்துறை அதிகாரிகள், திருவிழா குழு நிர்வாகிகள், பக்தர்கள்  திரளாக கலந்து கொண்டனர். 9ம்  தேதி 7ம் திருவிழாவன்று மாலை 5 மணிக்கு மயில், கிளி வாகனத்தில் சுவாமி, அம்பாள், ஆறாட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் போது தினமும் இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மெல்லிசை கச்சேரிகள் ஆகியன நடக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்