SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அம்பையில் தங்கம்மன் கோயில் கொடை விழா

2018-04-04@ 14:28:02

அம்பை: அம்பா சமுத்திரம் தங்கம்மன் கோயில் கொடை விழாவில் முளைப்பாரி, தீர்த்த குடம் ஊர்வலம் நடந்தது. மேல அம்பாசமுத்திரம் தங்கம்மன், தளவாய் சுவாமி கொடை விழா கடந்த மாதம் 25ம் தேதி  கால் நாட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். திருவிழா நாட்களில் தினமும்   சுவாமி, அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மார்ச்  30ம் தேதி இரவு மாக்காப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மறுநாள் மாலை 5  மணிக்கு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் இருந்து புனிதநீர் எடுத்து  வரப்பட்டு கும்ப பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. இரவு பூந்தட்டு  ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்ததும் புஷ்பாஞ்சலி, முழு காப்பு தீபாராதனை நடந்தது.

கடந்த 1ம்  தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி நதிக்கரை நட்டாத்தியம்மன் கோயில்  படித்துறையிலிருந்து பால்குடம், கிரககுட ஊர்வலம் நடந்தது. மதியம் 1 மணிக்கு கொடை விழாவில் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை பொங்கலிடுதலும், இரவு 9.30 மணிக்கு தீர்த்தகுடம் வீதியுலாவும் நள்ளிரவு சாமக்கொடை, படைப்பு, சிறப்பு தீபாராதனை  நடந்தது. இதையொட்டி வில்லிசை, நையாண்டி மேளம், வாண வேடிக்கை நடந்தது. விழாவில் திரளானோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து நேற்று  முன்தினம் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டது. ஏற்பாடுகளை சேனைத்தலைவர் சமுதாய கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்