SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவில்லி. ஆண்டாளுக்கு 108 மலர்களால் புஷ்பயாகம்

2018-04-04@ 14:26:21

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 108 வகை மலர்களால்  புஷ்பயாகம் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில், கடந்த மார்ச் 30ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று ஆண்டாளுக்கு 108  மலர்களை கொண்டு புஷ்பயாகம் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மல்லிகை, முல்லை, விருட்சி, சம்பங்கி, துளசி, மருது, ரோஜா உள்ளிட்ட 108 மலர்களை பயன்படுத்தப்பட்டது. முன்னதாக ஆண்டாள், ரெங்கமன்னார் முன் அத்தப்பூ கோலம்போல, மலர்களை பரப்பி வைத்திருந்தனர். அதன்பின் ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் மலர்களால் புஷ்பயாகம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி நாகாராஜ் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்