SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவாமிமலை கோயிலில் வள்ளி கல்யாண உற்சவம்

2018-04-04@ 14:25:33

கும்பகோணம்: சுவாமிமலை முருகன் கோயிலில் வள்ளி கல்யாண உற்சவம் நடந்தது. முருகனின் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் கடந்த 30ம் தேதி பங்குனி உத்திர தீர்த்தவாரி நடந்தது. 1ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் வள்ளி நாயகியார் திருக்கல்யாண விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை சண்முகசுவாமி, வேடமூர்த்தி, வள்ளிநாயகியார் சமேதராய் பரிவாரங்களுடன் உற்சவ மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வள்ளி திருவலஞ்சுழி கோயிலில் தினைப்புனத்துக்கு எழுந்தருளலும், வேடமூர்த்தி திருவீதி வலம் சென்று திருவலஞ்சுழி கோயிலில் சென்றடையும் நிகழ்ச்சி நடந்தது.

முருகன், வள்ளியை மணப்பதற்காக தினைப்புனத்துக்கு சென்று வள்ளியிடம் தனது விருப்பத்தை தெரிவிக்கிறார். ஆனால் வள்ளி மறுத்துவிடுகிறார். ஏமாற்றமடைந்த முருகன் தன்னுடைய அண்ணன் விநாயகரிடம் நடந்ததை கூறுகிறார். உடனே கவலைப்படாதே என கூறி யானை உருவில் வள்ளியை விரட்டுகிறார். அப்போது அச்சமடைந்த வள்ளி ஓடி சென்று முருகனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை (3ம் தேதி) சுவாமிமலை அரசலாற்றில் வள்ளிநாயகியாரை யானை விரட்டல் நிகழ்ச்சி நடந்தது. இதைதொடர்ந்து வேடமூர்த்தி சுவாமிமலை கோயிலுக்கு எழுந்தருளி சண்முகசுவாமியாக காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று மாலை அலவந்திபுரம் நடுத்தெருவிலிருந்து நம்பிராஜன் சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு வள்ளி நாயகியார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்றும், நாளையும் ஊஞ்சல் உற்சவம், ஊஞ்சல் புறப்பாடு நடக்கிறது. 6ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், சண்முகசுவாமி திருவீதி புறப்பாடு, வேடமூர்த்தி, வள்ளிநாயகியார் திருவீதி புறப்பாடு நடக்கிறது. 7ம் தேதி விடையாற்றி விழாவையொட்டி 108 சங்காபிஷேகம், சண்முகார்ச்சனை நடக்கிறது.

கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயிலில் பங்குனி  உத்திர விழா கொடியேற்றம் கடந்த 23ம் தேதி நடந்தது. கடந்த 1ம் தேதி காலை  பள்ளியறை சேவை, ஏக சிம்மாசன புறப்பாடு, 2ம் தேதி இரவு தேசிகர் சன்னதியில்  பெருமாள் தாயார் மாலை மாற்றி ஊஞ்சல் கண்டருளும் நிகழ்ச்சி, திருக்கல்யாண  உற்சவம் நடந்தது. இதையடுத்து நேற்று (3ம் தேதி) முதல் வரும் 6ம் தேதி வரை 4  நாட்களுக்கு விடையாற்றி சேவை நடக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

  • 26-06-2019

    26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்