SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குணத்தால் சிறந்தால் செல்வம் பெருகும்

2018-04-03@ 16:30:04

அழகாபுரியில் அத்தாணி மண்டபத்தில்
அரவிந்த இதழில் மெத்தை விரித்து
முத்துக்குடையின் கீழ் அரியாசனம் அமைத்து
குள்ள உருவும், ரோஜா மேனியும், பெருவயிறுடன்
கள்ளமின்றி சிரித்து அபயமளிக்கும் குபேரனே!
சிவனார் தோழனே! சீரடி பணிந்தேன் அருள்வாய்!
எண்ணப்படி செயல்கள்
நேராக வேண்டும்!
எண்ணியது வேறு
சொல்வது வேறென
பண்ணும் பாவம் அவருக்கே
பகையாய் மூள வேண்டும்!
அஞ்சுவது அஞ்சி
அவசியமானால் கெஞ்சி
விஞ்சியதை பகிர்ந்து
மிஞ்சியதை உண்ண வேண்டும்!
‘நாலுகால்’ மனிதன்
நடத்தை குணம் மாறவேண்டும்!
விதைத்தது விளைய வேண்டும்!
வள்ளல் மனம் மகிழ வேண்டும்!
பணத்தின் மதிப்பு குறைந்து
மனிதம், மாண்பு பரவ வேண்டும்!
பெண்கள் ஆசையை குறைத்து
கண்ணாய் குடும்பம் பேண வேண்டும்!
திருமகள் கோபம் கொண்டு
திருடரிடம் விலக வேண்டும்!
நல்லோர் நன்னடத்தை கண்டு
நயவஞ்சகர் மனம் மாறவேண்டும்!
நீதி, நேர்மை போற்றுவோர்
நிலைத்து உலகில் வாழ வேண்டும்!
உடன்பிறப்புகள் ஒற்றுமை காத்து
உள்ளத்தை அன்பால் நிரப்பி
உள்ளொன்று, புறமொன்று இல்லாமல்
கள்ளம், கபடமின்றி வாழ்ந்தால்
வெள்ளமென பொருட்செல்வம்
இல்லத்தில் நிரம்பி வழியும்!
நல்லவர் மனம் நோகக்கூடாது!
பெண்கள் கண்ணீர் சிந்தக்கூடாது!
பெற்றோர் உள்ளம் வெறுக்ககூடாது!
குழந்தைகளுக்கு எதிரான குற்றம் கூடாது!
நாணயம் தவறி பணம் சேர்க்ககூடாது-இனி
நாடிவரும் செல்வம், மகிழ்ச்சிக்கு எல்லையில்லை!
சிறந்த குணத்தால், செம்மை அறிவால்
கறந்த பால் போன்ற மனத்தால் அழைத்தால்
மல்லிகை, பன்னீர் மணம் வீச
தேரேறி வீடு வரும் திருமகள்!
இளமை,பொறுமை, துணிவு, புகழ்
பொன், பொருள் அள்ளித்தருவாள்!

- விஷ்ணுதாசன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • VeronicaStorm

  ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

 • vehicletest

  பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

 • germanybuilding

  ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

 • siriyaa

  ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

 • londonprotest

  பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்