SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

2018-04-03@ 14:33:01

காவேரிப்பட்டணம்:  காவேரிப்பட்டணத்தில் உள்ள கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காவேரிப்பட்டணம் கோவிந்த செட்டி தெரு அமைந்துள்ள கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையொட்டி, அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து வேதமந்திரங்கள் ஓத திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு ஆலயத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு புதியதாக செய்யப்பட்ட வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்