SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் திருக்கல்யாணம்

2018-04-02@ 14:50:08

கழுகுமலை:கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் திருவிழாவான 29ம்தேதி தேரோட்டம் நடந்தது. 11ம் நாளான நேற்று முன்தினம் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி அதிகாலை காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் நடந்தது. இதையடுத்து கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானைக்கு திருமண பட்டாடைகள் உடுத்தி மேளதாளத்துடன் வசந்த மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

பூஜைகளை சுப்பிரமணியபட்டர், பர்வீன்பட்டர், செல்லக்கண்ணுபட்டர், வைகுண்டம்பட்டர், திருமூர்த்திபட்டர் நடத்தினர். கோயில் செயல் அலுவலர் கார்த்தீஸ்வரன் தலைமை வகித்தார். பிரதோஷ குழு தலைவர் முருகன், பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், தலைமை எழுத்தர் பரமசிவம், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் கோயில் பணியாளர்கள், சீர்பாதம் தாங்கிகள் உள்பட பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 12ம் திருநாளான நேற்று சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பெரிய பல்லக்கிலும், சோமாஸ்கந்தர் சிறிய பல்லக்கிலும் வீதியுலா வந்து பட்டினப்பிரவேஷம் சென்றனர். 13ம் திருநாளான இன்று மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்