SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருச்செந்தூர் கோயிலில் முருகன் வள்ளி திருமணம்

2018-03-31@ 12:58:10

திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் முருகன்வள்ளி திருமணம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபமும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 5.30 மணி வள்ளிஅம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளி முக்கிய வீதி வழியாக சிவன் கோயிலுக்கு 7 மணிக்கு வந்தடைந்தார். கோயிலில் சாயரட்சை தீபாராதனையானதும் மாலை 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் கோயிலிலிருந்து எழுந்தருளி சிவன் கோயில் முன்பு வந்து வள்ளிஅம்மனுக்கு தோள்மாலை மாற்றும் வைபவம் நடந்தது.

தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான் தங்கமயில் வாகனத்திலும், வள்ளி பூச்சப்பரத்திலும் ரதவீதிகள் சுற்றி கோயிலுக்கு வந்தடைந்தது. இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமான்வள்ளிஅம்பாள் திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. இதைபோல் கோயிலின் உபகோயிலான நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்