SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்புவனம் கோயிலில் திருக்கல்யாணம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்

2018-03-29@ 11:56:38

திருப்புவனம்: திருப்புவனம் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருப்புவனத்தில் உள்ள  பிரசித்தி பெற்ற புஸ்பவனேஸ்வரர் செளந்தரநாயகி அம்பாள் கோயில் பங்குனி திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி அம்பாள்  தினந்தோறும் பல்வேறு வகையான வாகனங்களில் திருவீதி உலா வைபவம் நடைபெற்றது.

நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அம்பாளாக விவேக் பட்டரும் சுவாமியாக கணேஷ் பட்டரும்  திருக்கால்யாண கோலம் கொண்டிருந்தனர். தெய்வ சிகாமணிபட்டர் தலைமையில் கண்ணன் பட்டர், வீரமணி பட்டர் திருக்கல்யாண பூஜைகளை நடத்தி  வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்