SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகநாத சுவாமி கோயிலில் பிரமோற்சவத்தையொட்டி சந்திரசேகரர் திருக்கல்யாணம்

2018-03-28@ 11:51:51

ஆம்பூர்: ஆம்பூரில் நாகநாத சுவாமி கோயிலில் பிரமோற்சவத்தையொட்டி நேற்றுமுன்தினம் இரவு சந்திரசேகரர் திருக்கல்யாணம் நடந்தது. ஆம்பூர் பஜாரில் பழமையான சமயவல்லி உடனுறை நாகநாத சுவாமி கோயில் உள்ளது. அறநிலையத்துறை கீழ் இயங்கி வரும் இந்த கோயிலில் கடந்த 22ம் தேதி பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி பூதவாகனம், சிம்ம வாகனம் மற்றும் ரிஷப வாகனம் என பல வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்நிலையில், பிரமோற்சவத்தின் 4ம் நாளான நேற்றுமுன்தினம் இரவு சந்திரசேகரர் திருக்கல்யாண விழா நடந்தது. விழாவில் ஆம்பூர், இந்திரா நகர், கஸ்பா மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்ச வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்