SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி கோதண்டராமர் கோயிலில் சீதா, ராமர் திருக்கல்யாணம்

2018-03-27@ 12:04:46

திருமலை: திருப்பதி கோதண்டராமர் கோயிலில் சீதா, ராமர் திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோதண்டராம சுவாமி கோயிலில் கடந்த 16ம் தேதி கருடன் உருவம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை என்று இரண்டு வேளையும் தனித்தனி வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளி நான்கு மாடவீதியில் உலா வந்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், கடந்த 24ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவடைந்தது. மேலும், அன்றைய தினம் பிரமோற்சவத்துக்கான கொடி இறக்கப்பட்டது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீராம நவமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

இந்நிலையில், நேற்று கோயிலில் சீதா, ராமர் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக காலை 10 மணியளவில் தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் இருந்து தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமையில் சீர்வரிசை பொருட்கள் யானை மீது வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
காந்தி ரோடு, கோவிந்தராஜ கோயில், பஜார் வீதி வழியாக வந்து கோயிலில் உள்ள அதிகாரிகளிடம் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் சீர்வரிசை பொருட்கள் மற்றும் முத்து கிரீடத்தை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், 1984ம் ஆண்டு முதல் தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் இருந்து சீர்வரிசை பொருட்கள் கோதண்டராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த சீர்வரிசை பொருட்கள் சீதா, ராமரின் திருக்கல்யாணத்தில் பயன்படுத்தப்பட உள்ளது’’ என்றார். இதையடுத்து, கோயில் வளாகத்தில் பிரத்யேமாக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் சீதா, ராமர் கொலு வைக்கப்பட்டனர். பின்னர் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சீதா, ராமருக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்துக்கு பின் கோயில் மாடவீதியில் சுவாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து, இன்று இரவு 78 மணியளவில் ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதில், முதன்மை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, நிதித்துறை அதிகாரி பாலாஜி, துணை செயல் அலுவலர் ஜான்சிராணி, கண்காணிப்பாளர் ரவிகிருஷ்ணா ரெட்டி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்