SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எலுமிச்சை தேங்காய் கேரட் பச்சைப்பட்டாணி சாதம்

2018-03-14@ 15:01:50

தேவையான பொருட்கள்

பச்சரிசி    -    2 ஆழாக்கு
தேங்காய்த் துருவல்    -    1 கப்
கேரட் துருவல்    -    1/2 கப்
பச்சைப் பட்டாணி    -    100 கிராம்
எலுமிச்சை    -    பெரியது 3
இஞ்சி   -     சிறு நெல்லிக்காய்  அளவு(நறுக்கியது)
வர மிளகாய்     -    8
மஞ்சள் மற்றும் பெருங்காயம்    -     சிறிதளவு
எண்ணெய், கறிவேப்பிலை, கடுகு உளுந்து
தாளிப்பதற்கு.

செய்முறை

முதலில் அரிசியை குக்கரில் வைத்து பொலபொலவென சாதமாக வடித்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய இஞ்சியையும், பச்சைப்பட்டாணியையும் சேர்த்து வதக்கவும். பிறகு பிழிந்த எலுமிச்சைச் சாறை ஊற்றி மஞ்சள் , பெருங்காயம் சிறிது மற்றும் தேவையான அளவு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து  இறக்கி விடவும். இப்பொழுது எலுமிச்சை கரைசலை சாதத்தில் கலக்கி கேரட் துருவல், தேங்காய்த் துருவல் போன்றவற்றையும் சேர்த்து கலக்கினால்  எலுமிச்சை, தேங்காய், கேரட், பச்சைப்பட்டாணி சாத பிரசாதம் தயார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்