SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய 134வது ஆண்டு பெருவிழா

2018-03-14@ 14:24:27

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த முகையூரில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய 134வது ஆண்டு பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி 3ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினசரி திருப்பலி, தேர்பவனி, மறையுறை, தேவநற்கருணை ஆசீர்வாதம் ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் திருப்பலியும், இரவு புனித சவேரியார் திருவுருவம் தாங்கிய ஆடம்பர தேர்பவனியும் நடைபெற்றது. புதுச்சேரிகடலூர் மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தலைமையில் நடந்த ஆடம்பர தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இறையாசீர்வாதம் பெற்றனர். தொடர்ந்து நேற்று திருப்பலியும், கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ஹென்றி எழில்மாறன், உதவித்தந்தை பவுல்ராஜ் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்