SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி கோவிந்தராஜர், கோதண்டராமர் கோயில்களில் யுகாதியையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம்

2018-03-14@ 14:22:55

திருமலை: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி மற்றும் கோதண்டராம சுவாமி கோயில்களில் யுகாதியையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருகிற 18ம் தேதி கொண்டாடப்படும் யுகாதி பண்டிகையையொட்டி நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் 8.30 மணி வரை கோயிலில் உள்ள மூலவரை பட்டு வஸ்திரத்தால் மூடிவிட்டு, கருவறை முதல் கோபுரம் வரை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் பார்த்தசாரதி சுவாமி சன்னதி, ஆண்டாள் தாயார் சன்னதி, கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி சன்னதி, குண்டரிகலவாரி உட்பட சன்னதிகளிலும் தூய்மை பணி நடந்தது.

தொடர்ந்து, மஞ்சள், குங்குமம், கிச்சிலிக்கட்டை, திரிசூணம் உட்பட மூலிகை திரவியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 9 மணிக்கு பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், துணை செயல் அலுவலர் வரலட்சுமி, உதவி செயல் அலுவலர் உதய்பாஸ்கர், அர்ச்சகர் சீனிவாச தீட்சிதலு உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் வருகிற 16ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி 24ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடக்கிறது. இதையொட்டி நேற்று கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.

காலை 6 மணி முதல் 9 மணி வரை மூலவரை பட்டு வஸ்திரத்தால் மூடிவிட்டு தண்ணீரால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மூலிகை கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, 9 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், கோயிலில் உள்ள வாகன மண்டபத்தில் பிரமோற்சவத்தையொட்டி வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்