SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

108 பெண்கள் பங்கேற்ற கங்கை, காவிரி கலச யாத்திரை

2018-03-13@ 12:52:20

கீழக்கரை: உலக நன்மைக்காகவும், நீர் நிலைகளில் நீர்வளம் பெருக வேண்டியும் கீழக்கரையில் நீரின் அவசியம் குறித்த கங்கை, காவிரி கலச விழிப்புணர்வு ஆன்மிக யாத்திரை நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தர்ம ரக்ஷண ஸமிதியின் சார்பில் நடந்த இந்த யாத்திரை கீழக்கரை சித்தி விநாயகர் கோயிலில் தொடங்கி 2 கி.மீ தூரத்திலுள்ள அகஸ்தியர் கோயில் வரை நடந்தது. இதில் பங்கேற்ற 108 பெண்கள் தலையில் புனிதநீர் அடங்கிய கலசத்தைச் சுமந்து வந்தனர்.யாத்திரையை வேலூர் மாவட்டம் காட்பாடி ஆசிரமத்தைச் சேர்ந்த வாசு தேவானந்த சரஸ்வதி சுவாமிகள் மற்றும் கிருஷ்ணானந்தா சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தனர். உமா வாசன்  வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து அகஸ்தியர் கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. மேலும் கோ பூஜை, ஐந்து சிறுமிகளை வைத்து நடத்தப்பட்ட பாவிகா கன்னிபூஜை, சிவநாம அர்ச்சனை, யாக வேள்விகள் நடந்தன. விழாக்குழுத் தலைவர் பத்மானந்த சரஸ்வதி சுவாமி தலைமை வகித்தார். தர்ம ரக்ஷண ஸமிதியின் மண்டலப் பொறுப்பாளர்கள் முருகேசன், துணைத்தலைவர் காளி சண்முகம், குருசோலையப்பன், பொதுச்செயலாளர் முத்துவடுக நாதசிவம் மற்றும் கீழக்கரை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அமைப்பாளர் சண்முகம் நன்றி கூறினார். இதில் ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் அன்னதானமும்  நடைபெற்றது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • lari_petrol11

  டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

 • volcano_erimalai1

  467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

 • macedonia_makkal1

  நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

 • thiruchi_kaarmegam1

  திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

 • scotland_fireacci

  கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்