SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் : பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

2018-03-13@ 12:51:48

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அடுத்த திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர்   முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. கடந்த 4ம் தேதி மாசி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் திருவப்பூர் முத்துமாரியம்மன் புஷ்பமின் அலங்காரத்தில் வீதிஉலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக நேற்று காலை முதல் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி மற்றும் அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல சிறுமிகள் கோலாட்டத்துடனும், சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை மாறுவேடம் அணிந்தும் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பின்னர் முத்துமாரியம்மனை திருவப்பூரில் உள்ள காட்டுமாரியம்மன் கோயிலில் எழுந்தருள செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மனை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் கோயிலை சுற்றி திருக்கோகர்ணம் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் விழாக் கமிட்டியினர் மற்றும் திருவப்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானமும், 100க்கும் மேற்பட்ட இடங்களில் நீர்மோர் பானகமும் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்