SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத்திருவிழா கொடியேற்றம்

2018-03-13@ 12:51:16

நித்திரவிளை: தென் தமிழகத்தின் முக்கிய கோயில்களில் ஒன்றான கொல்லங்கோடு பத்தரகாளியம்மன் கோயில் தூக்கத்திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நேற்று காலை வழக்கமான பூஜைகள் முடிந்து காலை 7 மணியளவில் திருவிழா நடக்கும் கோயிலுக்கு மேள தாளங்களுடன் கொடிமரம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் 7.30 மணியளவில் மூலக்கோயிலில் இருந்து அம்மன் எழுந்தருளி ஊர் சந்திப்பு முடிந்து திரும்ப மதியம் கோயிலை அம்மன் வந்தடைந்தது. தொடர்ந்து சமூக விருந்து நடைபெற்றது.

பின் மாலை யானை அகம்படியுடன் மேளதாளங்கள் முழங்க முத்துகுடை அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருளி வழிநெடுக பூஜைகள் பெற்று கண்ணனாகம் சந்திப்பு, இளம்பாலமுக்கு மஹாதேவர் சன்னதி வழியாக இரவு திருவிழா நடக்கும் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து தேவஸ்தான தந்திரி ஈஸ்வரன் போற்றி தலைமையில் வானவேடிக்கை முழங்க பெண்கள் குரவையிட திருவிழா கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் நடந்த தூக்கத்திருவிழா துவக்க நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தேவஸ்தான தலைவர் சதாசிவன் தாயர் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் பென்.ராதாகிருஷ்ணன், கேரள அமைச்சர் கடந்தபள்ளி ராமசந்திரன், விஜயகுமார் எம்.பி., ராஜேஷ்
குமார் எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடியேற்று நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சிறப்பு நிகழ்வாக வருகிற 15ம் தேதி நேர்ச்சையில் கலந்து கொள்பவர்களுக்கான குலுக்கல் காலை 8.30 மணிமுதல் நடக்கிறது.
20ம் தேதி தூக்க நேர்ச்சைக்கு ஆயத்தமான வெள்ளோட்டம் (வண்டியோட்டம்) இரவு 6 மணிக்கு நடக்கிறது. 21ம் தேதி காலை 6 மணி முதல் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை தேவஸ்தான தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன்குமார், துணைத்தலைவர் பிரேம்குமார், இணைச்செயலாளர் பிஜீகுமார், பொருளாளர் சூரியதேவன்தம்பி, கமிட்டி உறுப்பினர்கள் விலோசனன் நாயர், தாமோதரன் நாயர், சந்திரசேகரன் நாயர், கிருஷ்ண நாயர், விஜயகுமார், சசீந்திரன் நாயர், பிரதிநிதிகள் சபை தலைவர் மணிகண்டன் நாயர், துணைத்தலைவர் விஜயகுமாரன் தம்பி மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்