SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாசி கொடை விழா : மண்டைக்காட்டில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை

2018-03-13@ 12:50:16

குளச்சல்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக்கொடை விழா வெகு சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த வருடத்தின் மாசிப் பெருந்திருவிழா கடந்த 4ம் தேதி காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை கணபதிஹோமம், பஞ்சாபிஷேகம், தீபாராதனை, மதியம் உச்சிகால பூஜை, மாலை சாயரட்சை தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை நடக்கிறது. சமயமாநாடு திடலில் இந்துசேவா சங்கம் சார்பில் ஆன்மிக உரைகள், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 3ம் நாள் முதல் தினமும் காலை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடந்து வருகிறது. 9ம் நாள் விழாவான நேற்று காலை பைங்குளம் அனந்தமங்கலம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து சந்தனகுடம் மற்றும் காவடி ஊர்வலம் புறப்பட்டு மண்டைக்காடு வந்தது.

உண்ணாமலைக்கடை பட்டாரியார் சமுதாயம் சார்பில் இரணியலில் இருந்து யானை மீது களபம் பவனி நடந்தது. இரவு இந்து சேவா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, பெரிய சக்கர தீவெட்டி அலங்கார பவனி நடந்தது. 10ம் நாள் இன்று (செவ்வாய்) அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோயிலில் இருந்து யானை மீது களபம் பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, 4.30 மணி முதல் 5 மணி வரை அடியந்திர பூஜை, குத்தியோட்டம், சமயமாநாடு திடலில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், பேச்சுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்குதல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு ஹரிகதை மற்றும் இன்னிசை விருந்து, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை, தீபாராதனை நடக்கிறது.

இனிமே மாப்பிள்ளை பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Franceshoppingcomplex

  பிரான்ஸ் வணிக வளாகத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு

 • PacificGiantGarbage

  பசிபிக் பெருங்கடலில் தனித்தீவு உருவாகும் அளவிற்கு குப்பைகள்: கடற்சார் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து!

 • 24-03-2018

  24-03-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • volcanotoxicsmoke

  இந்தோனேசியாவில் மவுண்ட் லிஜன் எரிமலை சீற்றம் : நச்சுப் புகையால் பொதுமக்கள் பாதிப்பு

 • Mexicoearthquake6months

  மெக்சிகோவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 6 மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாத வீடுகள்: கூடாரங்களில் வசிக்கும் அவலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்