SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நான் கொடுக்கும் போதனை என்னுடையதல்ல!

2018-03-13@ 09:40:32

இயேசு கலிலேயாவில் நடமாடி வந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக் கொண்டிருந்தனர்.  யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். நீர் புரியும் செயல்களைக் காண முடியும். ஏனெனில், பொதுவாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றை எல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே என்றனர். ஏனெனில், அவரது சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. இயேசு அவர்களிடம் ‘‘எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை’’ உங்களுக்கு எந்த நேரமும் ஏற்ற நேரம்தான். உலகம் உங்களை வெறுக்க இயலாது. ஆனால் ,என்னை வெறுக்கிறது. ஏனெனில், உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன்.

நீங்கள் திருவிழாவிற்கு போங்கள், நான் வரவில்லை. ஏனெனில், எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை என்றார். - (யோவான் 7: 1-8) காட்டில் இருந்த மூங்கில் ஒருநாள் வெட்டப்பட்டது. பின்பு, நெருப்பில் சூடேற்றப்பட்ட கம்பி மூங்கிலைத் துளைத்தபோது, ஐயோ! உடம்பு புண்ணாகிறதே என்று மூங்கில் கதறியது. உடனே காற்று மூங்கிலைப் பார்த்து கொஞ்சம் பொறுமையாக இரு என்று ஆறுதல் கூறியது. அதன்பிறகு மூங்கில் அருமையான புல்லாங்குழல் ஆயிற்று. மனதை மயக்கும் இசையை அள்ளிப்பொழிந்ததைப் பார்த்த காற்றினுடைய மேனி சிலிர்த்தது. உடனே காற்று புல்லாங்குழலைப் பார்த்து, ‘புண்பட்டவன் பண்பட்டவன் ஆனான்’ என்று கூறியது.

பாதித்திருவிழா நேரத்தில் இயேசு கோயிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார். ‘‘படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?’’ என்று யூதர்கள் வியப்புற்றார்கள். இயேசு மறுமொழியாக, ‘‘நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல. அது என்னை அனுப்பியவருடையது. அவருடைய திருவுளத்தின்படி நடக்க விரும்புவோர், இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா? அல்லது அதனை நானாகக் கொடுக்கிறேனா? என்பதை அறிந்துகொள்வர். தாமாகப் பேசுகிறவர் தமக்கே பெருமை தேடிக் கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர்.
மோசே உங்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்தார் அல்லவா? எனினும் உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைபிடிப்பதில்லை.

இப்போது என்னையும் கொல்லப் பார்க்கிறீர்களே?’’ - (யோவான் 7: 14-19) மனிதனே வெயிலை எண்ணிப்பார். அப்போதுதான் உனக்கு நிழலின் அருமை புரியும். நெருப்பை எண்ணிப்பார். அப்போதுதான் உனக்குத் தண்ணீரின் அருமை புரியும். பிரிவை எண்ணிப்பார். அப்போதுதான் உனக்கு நட்பின் அருமை விளங்கும். அனாதைகளை எண்ணிப்பார். அப்போதுதான் உனக்குப் பெற்றோரின் அருமை தெரியும். ‘‘வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள். எருசலேம் நகரத்தவர் சிலர், ‘‘இவரைத்தானே கொல்லத் தேடுகிறீர்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருந்தாரே? யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ?’’ என்று பேசிக் கொண்டனர்.

கோயிலில் கற்பித்துக்கொண்டிருந்த இயேசு, உரத்த குரலில், நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? என்பது பற்றி உங்களுக்குத் தெரியும். ஆயினும், நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே என்றார். இதைக்கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும், அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.’’
- (யோவான் 7: 24-30)

- ‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2018

  18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

 • 17-06-2018

  17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramalanchennaifestival

  தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

 • DragonBoatTournament2018

  சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

 • fifa_wcer1

  2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்