SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஞ்சாபி கார சமோசா

2018-03-12@ 16:45:23

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு:

மைதா - 2 கப், ஓமம் - 1/2 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், ஐஸ் தண்ணீர் - தேவைக்கு, நெய் - 1/4 கப்.

பூரணத்திற்கு:

நடுத்தரமான உருளைக்கிழங்கு - 4, வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1/2 கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 டீஸ்பூன், சிகப்பு மிளகாய்த்தூள், மாங்காய் தூள், கரகரப்பாக உடைத்த தனியா, மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு, சாட் மசாலாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா 1/4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்த அனைத்துப் பொருட்களையும் கலந்து பூரி மாவு பதத்தை விட
கெட்டியாக பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து பூரணத்திற்கு கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக தாளித்து அனைத்து மசாலாத்தூள், உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து வதக்கி கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.

பிசைந்த மாவை மீண்டும் ஒரு முறை பிசைந்து ஒரு உருண்டை எடுத்து பெரிய சப்பாத்தியாக திரட்டி, சம பாதியாக வெட்டி அதில் ஒன்றை எடுத்து கோன் போல் செய்து தண்ணீர் தொட்டு சீல் செய்து, நடுவில் பூரணத்தை வைத்து மேலே தண்ணீர் தடவி ஒட்டி மூடி விடவும். மாவு அனைத்தையும் இது போல் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து சாஸுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்