SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சிவனடியார்கள் பாதயாத்திரை

2018-03-12@ 12:45:04

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோயிலுக்கு திருநாவலூரில்இருந்து சிவனடியார்கள் பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தேவாரத்தில் சுந்தரரை சிவபெருமான் ஆட்கொண்டு அந்தணர் வடிவில் காட்சியளிக்கும் வரலாற்று நிகழ்வை போற்றும்விதமாக நேற்று காலை திருநாவலூர் சிவன்கோயிலில் இருந்து,  ஆனைவாரி, தடுத்தாட்கொண்டூர் வழியாக திருவெண்ணெய்நல்லூர் சிவன்கோயிலுக்கு முதியவர் வடிவில் சிவனும், மணக்கோலத்தில் சுந்தரையும் சிறப்பு அலங்காரத்துடன் சிவனடியார்கள் தேவார பண்ணிசை இசைத்தவண்ணமாகவும், திருக்கயிலை வாத்திய பெருமுழக்கத்துடனும் சிவனடியார்கள் ஆடி பாடிக்கொண்டு வந்த பாதயாத்திரை நடைபெற்றது.

இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் திருநாவலூர் சிவன்கோயிலில் துவங்கி கெடிலம் ஓம்சக்தி கோயில், மேட்டத்தூர் அய்யனார் கோயில், சிறுத்தனூர் அய்யனார்கோயில், மடப்பட்டு அம்மன்கோயில், பருகம்பட்டு கெங்கையம்மன்கோயில், மழையம்பட்டு மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்காக அருள்பாலித்தனர். ஒவ்வொரு ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையிலும் சிவனடியார்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்